மக்களை பணம் பெற வருமாறு கூறி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று (31.12) இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் சமுர்த்தி பயனாளிகளுக்கு ”செழிப்பான இல்லம்” என்ற திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் கூட்டம் நெடுங்கேணி பிரதேச சமுர்த்தி தலைமை அதிகாரி தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இது தொடர்பாக பிரதேச செயலாளர் பரந்தாமனுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கூட்டத்தை உடனடியாக கலைக்குமாறும், வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து வெளியேறுமாறு பணித்த அரச அதிகாரிகளுடன் சிறிடெலோ கட்சியின் செயலளாh ப. உதயராசா முரண்பட்டதுடன் சில அதிகாரிகளை தரக்குறைவாகவும் Nசியுள்ளதாக அதிகரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் ஏழ்மையை பயன்படுத்தி மகிந்தா ராஜபக்சவுக்குஆதரவு கோரும் தேர்தல் பிரசாரத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பாக மக்கள் சமுர்த்தி உத்தியோத்தர்களை திட்டி தீர்த்தனர்.