சுவிஸில் கபே ஒன்றில் இலங்கை தூதரக அதிகாரியொருவர் மற்றும் மாற்றுக்கொள்கை நிலையத்திற்கான சட்டத்தரணி பவானி சகிதம் சுமார் இரண்டு மணிநேரம் மடிக்கணனி ஒன்றில் குறித்த வரைபு திருத்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜ.நா சர்வதேச நீதிபதிகள் சகிதம் கைபிரிட்ஸ் நீதிமன்றமென ஜ.நா சொல்லிவருகின்ற நிலையில் அவற்றை முற்றாக புறந்தள்ளி இலங்கையினில் உள்ளக விசாரணையினை நடத்துவதையே அமெரிக்க அரசு முன்னெடுத்துவரும் நகல்வரைபு உள்ளடக்கியிருப்பதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் இலங்கை அரசிற்கு ஏற்கனவே அமெரிக்க உறுதிமொழி வழங்கப்பட்டுவிட்டதாகவும் தமிழ் மக்களை சரிசெய்யும் பணி சுமந்திரன்-சம்மந்தன் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதற்கு ஏதுவாக அமெரிக்கா சமர்ப்பிக்கும் பிரேரணையினை திருத்தம் செய்து சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு தமிழ் மக்களை சட்டரீதியாக சிக்கல் இருப்பது போன்று காண்பித்து நிறைவு செய்து வழங்கும் நடவடிக்கையினில் சுமந்திரன் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேநேரம் இன்று பிரித்தானியாவில் உலகத்தமிழர் பேரவையுடன் இணைந்து சந்திப்பை நடத்தியுள்ளார் சுமந்திரன். சந்திப்பிற்கு சுயவிபரங்களை முற்பதிவு செய்தோர் மட்டுமே சந்திப்பு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


