மிஸ்டர் கோத்தா! மக்களை கொல்லேல்லை எண்டால் ஏன் விசாரணைக்குப் பயப்பிடுறியள்?

மிஸ்டர் கோத்தா! மக்களை கொல்லேல்லை எண்டால் ஏன் விசாரணைக்குப் பயப்பிடுறியள்?:

ஈழத்திலை முள்ளிவாய்க்காலிலை நடந்த இனப்படுகொலையை ஆராலை மறைக்க ஏலும். ஆனால் முழுப் பூசனிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கிற மாத்திரி ஈழ இனப்படுகொலையை மறைக்கலாம் எண்டு சிங்கள தேசம் நினைக்குது கண்டியளே!
 
ராஜபக்சக்கள் இன்னும் இன அழிப்புப் போரை மனிதாபிமான யுத்தம் எண்டு பாட்டுப்பாடுற வேலையை செய்து கொண்டு திரிறினம். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எண்டு சொல்லுவினம். அப்பிடித்தான் கோத்தா, சரத்பொன்சேகா, மகிந்த ஆக்களும் புலம்புறினம்...
 
மனித உரிமை விவகாரம் அரசியல் ஆகிட்டுது எண்டு மகிந்த கவலைப்படுறார். ஈழ சனங்களை கொன்று அந்த இரத்தத்தை வைச்சு தசைகளை வைச்சு, பிணங்களை வைச்சு அரசியல் செய்தவர் மனித உரிமையைப் பற்றி கவலைப்படுறார் எண்டால் பாருங்கோவன்...
 
அதுமட்டுமே, சரத்பொன்சேகா யுத்த விசாரணையளுக்கு தான் தயார் எண்டுறார். ஐ.நா அறிக்கையை வரவேற்கிறன் எண்டு சொன்னவர் பிறகு சிங்கள படையள் போர்க்குற்றத்திலை ஈடுபடேல்லை எண்டுறார். புலியைப் பற்றி ஐ.நா அறிக்கையிலை வந்ததை வரவேற்றிருப்பாரோ?
 
இப்ப கோத்தபாய சொல்லுறார் புலியளின்டை தேவையை நிறைவேற்ற ஐ.நா அறிக்கை விட்டிருக்குதாம்.. தாங்கள் போர்க்குற்றம் செய்யேல்லையாம். மனித உரிமையை நிலையாடட்ட யுத்தம் செய்தவையளாம்..
 
கொத்துக் கொத்தாய் சனங்களை கொன்று, பாதுகாப்பு வலயம் எண்டு அறிவிச்சு சனங்களை கொண்டு சரணடைஞ்ச சனங்களை கொன்று பாலியல் வன்புணர்வுகளை செய்து, காணாமல் போகச் செய்து, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்து மனித உரிமையை காப்பாற்றுறது டிசைனயாய் இருக்குதே
 
இசைப்பிரியாவை, பாலச்சந்திரனை எப்பிடிக் கொன்று போட்டியள். அதுவே உங்கடை மனித உரிமையை நிலைநாட்டுற யுத்தம்..
 
முள்ளிவாய்க்காலிலை சனங்களை கொன்றழிக்காமல் என்ன குருவியளையே சுட்டுக்கொன்றனியள்
 
மனித குலத்திற்கே விரோதமான ஆக்கள் நீங்கள். மனித குலமே அஞ்ச போர்க்குற்றங்களை, இனப்படுகொலையை செய்து அதிலை சந்தோசப்பட்ட உங்களை ஆர் எண்டு தமிழருக்கு மாத்திரம் இல்லை இப்ப சிங்களவருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும்..
 
இப்ப உங்கடை உந்த பூசனிக்காயை எல்லாம் மறைக்க ஏலாது. உங்கடை குற்றங்கள் உலகத்திற்கே வெளிச்சம் ஆகிட்டுது.
 
சரி, மிஸ்டர் கோத்தா!  நீங்கள் குற்றங்கள் இழைக்கேல்லை எண்டால் ஏன் விசாரணைக்கு பயப்பிடுறியள்? ஏன் அஞ்சி ஒளியுறியள்? குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். மடியிலை கனமறிருந்தால் வழியிலை பயமிருக்கும்... 
 
யாழ்ப்பாணத் தம்பி 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila