உயிருடன் இருப்பவர்கள் சிறைக்களில் அழுந்த தமிழ்தேசியவாதிகளாக உயர்வதில் யாருக்கு என்ன லாபம்?

உயிருடன் இருப்பவர்கள் சிறைக்களில் அழுந்த தமிழ்தேசியவாதிகளாக உயர்வதில்  யாருக்கு என்ன லாபம்?

 
உயிருடன் இருப்பவர்கள் சிறைக்களில் அழுந்த தமிழ்தேசியவாதிகளாக உயர்வதில் யாருக்கு என்ன லாபம்?நடராஜா குருபரன்:-

இலங்கையின் சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியற் கைதிகள் பலர் அவ்வப்போது தங்கள் சோகங்களை என்னிடம் கொட்டித் தீர்க்கின்றனர்...

தமது விடுதலை குறித்து யாரும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என வேதனைப்படுகின்றனர்...

தமது வழக்குகளை பேசும் சட்டத்தரணிகளுக்கு கொடுப்பதற்கு தம்மிடம் பணம் இல்லை என்று சொல்கின்றனர்...

வசதி உள்ளவர்கள் வெளித் தொடர்புகள் உள்ளவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சிலர் வழக்காடி விடுதலை பெற்று செல்வதாக சொல்கின்றனர்... 

வறுமையில் உள்ளவர்களும், வெளித் தொடர்புகள் இல்லாதவர்களும், குடும்ப உறவுகளை தொலைத்து தனித்து விடப்பட்டவர்களும், விரக்த்தியின் விழிம்பில் இருப்பதாக சொல்கின்றனர்...

இவற்றை என்னால் செவி மடுத்து கேட்க மட்டுமே முடிகிறது... நெஞ்சம் கனத்த பதிவுகளை இணையத்திலும் சமூக வலைத்தளத்திலும் வெளிப்படுத்தவே முடிகிறது... அதற்கப்பாலும் ஊடகத்தை நடாத்தவே நாள்தோறும் திண்டாடும் ஒருவரால் வேறு எதனைத்தான் செய்ய முடியும்?

தமிழ்த் தேசிய கூட்;டமைப்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்... தலா 25 ஆயிரம் ரூபா வீதம் பண அன்பளிப்பு செய்தால் 400000.00 பணம் திரட்ட முடியும்... 30 மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் தலா 10000.00 ரூபா விகிதம் ஒதுக்கினால் 300000.00 ரூபாவை திரட்ட முடியும்... மாகாண அமைச்சர்கள் தமது ஒதுக்கீடாக ஒரு தொகை பணத்தை ஒதுக்கினால் குறைந்தது எல்லாமாக 1000000.00 பத்து லட்டசம் ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும்...

இதனை அடிப்படை நிதியாகக் கொண்டு தமது வழக்குகளுக்கு பணம் இன்றி துயர்படும் இந்த அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்த முடியும்... ஆனால் இது பற்றி யார் சிந்தித்து இருக்கிறார்கள்?

இவை தவிரவும் இந்தக் கைதிகளுக்காக வழக்காடும் தமிழ் சட்டத்தரணிகள் இவர்களின் வறுமையையும் இயலாமையையும் கவனத்தில் எடுத்து குறைந்த பட்ச வழக்கு செலவுடன் வழக்காட முன்வர வேண்டும்...

1990களில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் (மேர்ஜ்) இலவச சட்ட உதவிகளை வழங்கி வந்தது... பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கைதான பல தமிழ் இளைஞர்கள் இந்த அமைப்பின் உதவியால் விடுதலையானார்கள்... அப்போது இந்த அமைப்பால் வெளியிடப்பட்ட சரிநிகர் பத்திரிகையில் பணியாற்றியமையினால் அது பற்றி நிறைய தெரிந்திருந்தது...

அக்காலத்தில் மனித உரிமை வழக்குகளில் பிரபல்யமான தெற்கைச் சேர்ந்த சிங்கள சட்டத்தரணிகள் சிலர் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக இலவசமாக வழக்காடி அவர்களை விடுவித்த சந்தர்ப்பங்களும் உண்டு...

ஆனால் யுத்தம் நிறைவடைந்து 6 அண்டுகள் கடந்த பின்பும், குற்றங்கள் நிரூபிக்கப்படாத, அல்லது குற்றச்சாட்டுக்களே சுமத்தப்படாத இளைஞர்கள் கூட சிறையில் வாட தமிழ் அரசியல்வாதிகள் வீரவசனங்களைப் பேசியே காலத்தை ஒட்டுகின்றனர்....

தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட புலம்பெயர் தேசத்தவர்களோ வருடா வருடம் சேர்க்கும் பணத்தில் மகா மண்டபங்களை எடுத்து லட்சக்கணக்கான புவுண்ஸ்களையும், லட்சக்கணக்கான ஈரோக்களையும் நீரிலும் நெருப்பிலும் கரைத்து விடுகின்றனர்...

ஆனால் விடுதலைக்காக போராடி அல்லது புலிகளின் பெயரால் கைதாகி சிறையில் வாடும் கைதிகள் வழக்காட பணமின்றி வாழ்வைத் தொலைத்து நிற்கின்றனர்....

உயிருடன் இருப்பவர்கள் சிறைகளில்  அழுந்த தமிழ்தேசியவாதிகளாக உயர்வதில்  யாருக்கு என்ன லாபம்?
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila