தமிழரை கீழ்நிலை சமூகமா மாற்றவே திட்டமிட்ட சதிவேலைகள் அரங்கேற்றம் (வடக்கு முதலமைச்சர் கவலை)


தமிழரை கீழ்நிலைச் சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்ட அரசியல் சதிவேலைகள் எம்முன்னே கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ளது. அதிலிரு ந்து தப்புவதற்கு எம்பிள்ளைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி கோவிற்கடவை சன சமூக நிலையத்திறப்பு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை நடை பெற் றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர்  அங்கு மேலும்  உரையாற்றுகையில், 
மாணவர்கள்,  இளைஞர்கள்,  யுவதிகளின் ஒழுக்கப்பாடானது இன்று எம்முன்னே பரந்து விரிந்து கிடக் கின்ற ஒரு பாரிய விடயமாக உள்ள து. எமது பிள்ளைகளை அல்லது எம் மைச் சார்ந்த பிள்ளைகளை எவ் வாறு ஒழுக்கசீலர்களாக மாற்றுவது என்பது எம்முடைய கவனத்தை ஈர்க்கவேண்டும். அவர்களின் பழக்க வழக்கங்களைப்  பாதிக்கக்கூடிய அடிப்படைக்காரணிகள் யாவை? போதைப்பொருட்கள் எவ்வாறு மாண வர்களின் கைகளுக்கு கிடைக் கின்றன? அதற்கான பணம் எவ்வாறு கிடைக் கப்பெறுகிறது? போன்ற பல விடய ங்களில் நாம் கண்ணுங்கருத்து மாக இருந்து விடைகாண வேண்டும்.
எமது சமூகத்தின் அழியாச் செல் வமாக விளங்கக்கூடிய  கல்வி என்ற பெரிய சொத்தை எவ்வாறாவது அதன் மூலவேருடன் தகர்த்தெறிந்து எம் மைக் கையாலாகதவர்களாக மாற்றி அடிமைச்சீவியம் நடத்தக்கூடிய கீழ் நிலைச் சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்ட அரசியல் சதிவேலைகள் எம்முன்னே கட்டவிழ்த்து விடப்பட்டு ள்ளதோ என்று எண்ண இடமுண்டு. இதிலிருந்து நாம் தப்புவதற்கு, எமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கு நாம் ஆவன செய்யவேண்டும்.
இன்று பத்திரிகைகளை புரட்டினால் கொலை,  கொள்ளை,  பாலியல் துஷ் பிரயோகம் எனப் பக்கம் பக்கமாகச் செய்திகள் காணப்படுகின்றன. மிக வும் பண்பட்ட சமுதாயமாக சிறந்த பழக்கவழக்கங்களுடன் கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்தச் சமூகம் சீர்கெட்டுப்போவதை வேண்டும் என்றே திட்டமிட்டு அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு வாழாதிருக்க முடியாது. இவ்வாறான செயல்களை கண்காணிக்கக்கூடிய அல்லது தடுக் கக்கூடிய சக்தி இவ்வாறான சன சமூக நிலையங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.
இதன்காரணமாகவே பொலிஸா ருடன் பொதுமக்கள் சேர்ந்து எடுக் கக்கூடிய சில நடவடிக்கைகள் சம்ப ந்தமாக ஆராய்ந்து அதற்கான குழு அமைக்க வேண்டியவற்றைச் செய்து வருகின்றோம். விரைவில் மேல் மட்ட, நடுத்தர, கீழ்மட்ட குழுக்கள் செய ற்பட இருக்கின்றன. மேல்மட்டக் குழு பிரதிப்பொலிஸ்மா அதிபர் அமை ச்சர்கள் மட்டத்தில் ஆராயும். மத்திய அல்லது நடுத்தர மட்டக்குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்- நியமிக்கப் பட்ட மாகாணசபை உறுப்பினர் மட்ட த்தில் ஆராயும். மக்களிடையே கீழ் மட்டத்தில் செயற்பட இருக்கும் குழுக் களில் சனசமூக நிலைய அலுவ லர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
எனவே அன்பார்ந்த பிள்ளை களே! உங்கள் நண்பர்கள்,  உறவி னர்கள்,  தெரிந்தவர்கள் இவ்வா றான போதைப்பழக்கவழக்கங்களுக் கும் களவு, கொள்ளை, சூது போன் றவற்றிற்கும் ஆளாவதாகக் தெரிய வந்தால் அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லப் பாருங்கள். அவர் களை அவ்வாறான பழக்கங்களி லிருந்து விடுபட்டுச் செல்வதற்கு பாடுபடுங்கள். இல்லையயன்றால் எங்கள் குழுக்களிடம் உங்கள் கல் லூரிகள் மூலமாக எடுத்துச் சொல் லுங்கள். முயற்சித்தால் ஆகாதது ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila