வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்! அதிகாரமற்ற மாகாணசபை!!

புதிய அரசம் எதிர்பார்த்தது போன்று ஒத்துழைப்பினை விரைந்து வழங்கவில்லை.இதனாலேயே வடமாகாணசபையிலுள்ள வெற்றிடங்களிற்கு பட்டதாரிகளை நியமிப்பது இழுபறிப்பட்டு செல்வதாக வடக்கு முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைதடியிலுள்ள மாகாண சபையின் பேரவைக்கு முன்பாக, வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த  பட்டதாரிகள், வடமாகாண சபையை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
velai-1
வடமாகாண சபையின் 35ஆவது அமர்வு இன்று  நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இன்றைய சபை அமர்வில் தமது பிரச்சினை குறித்து கலந்துரையாடி, தீர்வை பெற்றுத்தர வேண்டுமென வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
velai-illa-paddatharikal-poraddam-02வட மாகாண சபைக்கு முன்பாக ஏற்கனவே பல தடவைகள் தாம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தும் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாததனால் ஆர்ப்பாட்டக்கார்கள், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் பேரவையின் நுழைவாயில்களை வழிமறித்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையினில் அவர்களுடன் முதலமைச்சர் பேச்சுக்களினை நடத்தியிருந்தார்.
velai-illa-paddatharikal-poraddam-01
பிரதம செயலாளர் பிரச்சினை,ஆளுநர் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதே ஏன் எமது நியமனங்கள் செய்யப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தரப்னிpல் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த முதலைமச்சர் வெற்றிடங்களை நிரப்ப ஏதுவாக அனுமதி கோரி மத்திய அரசிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
velai-illa-paddatharikal-poraddam-03
முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் சொன்னது போன்று ஒரு சிற்றூழியரை நியமிக்க கூட அதிகாரமற்றதாகவே மாகாணசபை உள்ளதாக தெரிவித்தார். போராட்டம் தொடர்ந்த போதும் சுமார் அரைமணிநேர தாமதத்தின் பின்னரே மாகாணசபை அமர்வு ஆரம்பமாகியிருந்தது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila