இன அழிப்பு நடக்கவில்லையா? இதைத் தீர்மானிப்பது யார்?


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளிடம் அவசரமான ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் விட வேண்டி உள்ளது.
அதாவது வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த மிகப்பெரிய மனிதப் படுகொலை தொடர்பில் மறந்தேனும் ஏறுமாறான கருத்துக்களை சொல்லி விடாதீர்கள் என்பதே அந்தக் கோரிக்கையாகும்.
வன்னியில் நடந்த பேரவலம் சாதாரணமான தன்று. பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களைக் காவு கொண்ட அந்தத் துயரம் இந்த உலகம் இருக் கும் காறும் நினைவில் இருக்கும் என்பது நிச்சயம். 
உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடி ஓடி அபயக் குரல் எழுப்பிய தமிழ் மக்களைக் கொன்று ஒழித்ததை இன அழிப்பு இல்லை என்று யார் கூறினாலும் அவர்கள் பச்சைத் துரோகிகள்.  பணத்துக்கு விலை போய் தமது இனத்தை விற்றுப்பிழைக்கும் நயவஞ்சகர்கள் என்றே தமிழ் உலகம் கூறும்.
ஆகையால், வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த பேரவலத்தை அனுபவிக்காத எவரும் எதிர்மாறாகக்  கருத்துக் கூறத் தகைமை அற்றவர்கள். இத்தகையவர்கள் தங்கள் கெளரவத்தைக் காப்பாற்ற வேண் டும் என்று நினைத்தால் மெளனமாக இருப்பது நல்லது.
உதவி செய்யாமல் இருப்பதில் தவறில்லை. ஆனால் துரோகம் இழைக்காமல் இருப்பது அவசியம். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் படைத்தரப்பு பயன்படுத்திய ஆயுதங்கள்; சரணடைந்தவர்களுக்கு நடந்த சித்திரவதைகள்; குழந்தை கள், பெண்கள், முதியவர்களுக்கு இழைத்த கொடூ ரங்கள் என்பவற்றை ஆராய்ந்தால்-அனுபவித் தால் அந்த யுத்தம் இன அழிப்பா? இல்லையா? என் பது தெரியவரும். 
இதனைவிடுத்து இன அழிப்பு நடைபெறவில்லை என்று நாங்களே கூறிக்கொள்வதானது வன்னியில் நடந்த யுத்தம் தந்த வலியைவிட பன்மடங்கு வலி தருவதாகும்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் போது இடப்பெயர்வால்  மக்கள் சந்தித்த கஷ்டங் கள், பொருளாதாரத் தடையால்; உணவுப் பஞ்சத் தால் மக்கள் அனுபவித்த பசிக் கொடுமை, மருத் துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற் பட்ட இழப்புகள், வன்னியில் இயங்கிய சர்வதேச தொண்டு நிறுவனங்களை உடனடியாக வெளி யேறுமாறு அரசு போட்ட உத்தரவால், ஆருமற்ற அநாதைகளாக ஆக்கப்பட்ட பெரும் கொடூரம், மக் கள் தங்கியிருந்த தற்காலிகக் குடிமனைகள் மீது நடத்தப்பட்ட ஆட்லெறித் தாக்குதல்கள் இவை எல் லாம் எந்த வகைக்குள் அடக்கக் கூடியவை என் பதை சிந்தியாமல், இன அழிப்பு நடைபெறவில்லை என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
ஆகையால், இத்தகைய வார்த்தைப் பிரயோகங் களை யார் மேற்கொண்டாலும் அவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நம் மைப் பொறுத்தவரை, நாடு கடந்த தமிழீழம் என்ற அரசு தான் இயங்குவதை நிரூபிப்பதாக இருந்தால், தமிழினத் துரோகத்திற்கு  வெளிநாடுகளில் வைத்து தண்டனையை வழங்க வேண்டும்.
அரசு என்றால் குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தண்டனை கொடுப்பதும் கட்டாயம் அல்லவா? அத்தகையதொரு தண்டனை முறையை நாடு கடந்த அரசு செய்தாகவேண்டும். அப்போதுதான் வெந்து நீறாகிய மன நிலையில் இருக்கும் தமிழ் மக்கள் சற்றேனும் ஆறுதல் அடைவர்.
எதுவாயினும் தமிழ் அரசியல்வாதிகள் வன்னி யுத்தம் தொடர்பில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila