குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
அப்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், புனர்வாழ்வுக்கு அனுப்பும் முடிவை ஏற்க, 14 அரசியல் கைதிகளும் மறுப்புத் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையே புனர்வாழ்வு என்று நீதிவானிடம் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டவாளர் கே.ரத்னவேல், தமது கட்சிக்காரர்கள் அப்பாவிகள் என்றும், அவர்கள் புனர்வாழ்வுக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வழக்கை விசாரித்து, அவர்களை அப்பாவிகள் என்று நிரூபிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.