கிளி.கரைச்சிப் பிரதேச பிரிவில் 2010 இற்கு பின் 32 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் 32 குடும்பங்களைச் சேர்ந்த 91 சிங்கள மக்களும் மீள்குடியேறியுள்ளனர் என பிரதேச செயலக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைச்சி பிரதேச செயலகத்தில் மொத்தமாக 23278 குடும்பங்களைச் சேர்ந்த 75910 மக்களில்  23079 தமிழ் குடும்பங்களச் சேர்ந்த 75203 மக்களும், 167 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்நத 616 மக்களும், அடங்குகின்றனர். மேற்படி சிங்கள மக்கள் கரைச்சி பிரதேச செயலகத்தின் கீழ்குறிப்பிடப்படும் கிராமங்களில் தங்களின் மீள்குடியேற்ற பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனைவிழுந்தான் 3 குடும்பங்கள், கண்ணகிநகர் ஒரு குடும்பம், கோணாவில் ஒரு குடும்பம், மலையாளபுரம் ஒரு குடும்பம், கிருஸ்ணபுரம் இரண்டு குடும்பம்ங்கள், செல்வாநகர் ஒரு குடும்பம், ஆனந்தபுரம் 3 குடும்பங்கள், திருவையாறு ஒரு குடும்பம், இரத்தினபுரம் ஒரு குடும்பம், கனகாம்பிகைகுளம் ஒரு குடும்பம், கிளிநகர் 10 குடும்பம், திருநகர் இரண்டு குடும்பங்கள், பெரியபரந்தன் ஒரு குடும்பம், ஊற்றுப்புலம் ஒரு குடும்பம், ஜெயந்திநகர் ஒரு குடும்பம் என பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila