இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் என்றும் ஆனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னர்தான் அந்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரபகிர்வு முறைகள் புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது எனவும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இந்திய பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றிய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய மத்திய அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.