திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்றினை 2011ஆம் ஆண்டில் அரசு திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, மாத்தளை தம்புள்ளை உட்பட பல மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பான கருத்தறிவதற்கான தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனை கூட்டம், இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வைத்திய நிபுணருமான பூ-லக்மன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,
எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் திருகோணமலையின் சனத்தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிலையங்கள் முதலியனவற்றிற்கு தெற்கில் இருந்து பெரும்பான்மையின மக்களை குடியேற்றி திருகோணமலையின் துறைமுகத்தை மையமாக வைத்து பல அபிவிருத்தி திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் அமைத்து தழிழர்களை அரிதாக்கும் திட்டம் அது.
அவ்வாறான திட்டங்களை தடுக்கக் கூடிய தீர்வுகளை நாம் முன் வைக்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தை வகிக்கும் இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய இந்த மாவட்டத்தின் இவ்வாறான நிலையை நாம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டு தனது கருத்தினை வெளியிட்டிருந்தார்.
.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila