வடக்கு மாகாண சபையின் சிறப்புக் காண்பீரோ! மக்காள்


தமிழ் மக்கள் தனி நாடு கேட்ட காலம் அது. சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தமிழர்களிடம் தனி நாட்டைக் கொடுங்கள். இரண்டு வருடங்களின் பின்னர், ஐயா! தனிநாட்டை நீங்களே வைத்திருங்கள் என்று தமிழர்கள் எங்களிடம் வந்து கூறுவார்கள் என்று தெரிவித்தார். 

அவர் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன? என்று அன்று தெரியவில்லை ஆயினும், வடக்கு மாகாண சபையில் நடக்கின்ற சண்டித்தனங்களைப் பார்க்கும் போது அந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பெரும் தீர்க்கதரிசி என்று எண்ணத் தோன்றுகிறது. 

வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று முன்தினம் நடந்தபோது  கூட்டம் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை மக்கள் அறிந்திருப்பர். வடபுலத்து மக்கள் எத்தனையோ துன்ப துயரங்களைச் சுமந்து கொண்டு வாழ்கின்ற நிலையில்,

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஹோட்டலில் உண்டு மகிழ்ந்து, சபையைக் குழப்புவது எங்ஙனம் என்பது பற்றி ஆலோசிப்பதாக அறிந்தபோது, தமிழினத்தையே வெறுக்கச் செய்வதாக இருந்தது. 
வடக்கு மாகாண சபையில் கோபமும் உணர்ச்சி வசப்படுதலும் பழிவாங்கலும் உச்சம் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது.
பொதுவில் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியுமே வாக்குவாதப்பட்டுக் கொள்ளும். அதிலும் ஒரு நாகரிகம் பின் பற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

ஆனால், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பே மோதிக்கொள்வது தமிழர் அரசின் இலட்சணத்தைக் கோடி காட்டுகிறது. எதற்கும் சண்டியன் கட்டுக் கட்டுபவரை கண்ணகி பாத்திரத்தில் நடிக்க வைக்க தூதுவர்கள், தாயே! தங்கள் கணவன் கோவலனை கொன்று விட்டார் என்று கூற, கோபாவேசப்பட்ட கண் ணகி, தான் உடுத்திருப்பது சேலை என்பதையும் உணராமல் சேலையைத் தூக்கி மடித்து சண்டியன் கட்டுக் கட்டியதான காட்சிதான் வடக்கு மாகாண சபையில் நடக்கும் கூட்டங்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. 

நேர்மையான மக்களின் மரியாதைக்குரிய-சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தகைசார் முத லமைச்சரைக் கூட மதிக்கத் தெரியாமல் நடந்து கொள்கின்றவர்கள் தொடர்பில் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எதுவாயினும் ஒன்றை மட்டும் எங்கள் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். அதாவது வடக்கு மாகாண சபையின் கூட்டங்கள் திட்டமிடப்பட்டு குழப்பப்படுகின்றன. இதன் பின்னணியில் ஓர் அரசியல் சக்தி வேலை செய்கிறது. இந்தக் குழப்பத்தில் குறிப்பிட்ட சிலர் ஈடுபடுகின்றனர். இந்த நிலைமை முதல மைச்சரை கபடமாக வெளியேற்றுவதற்கானது என்பதே அதுவாகும்.  இனித் தமிழ் மக்கள்தான் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila