எமது நிலத்தின் பயனை இராணுவத்தினர் அனுபவிக்கின்றனர் : சி.வி


வடக்கு மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் படையினர் வசம் சென்று அவற்றின் பயனை அவர்கள் அனுபவிக்கின்ற நிலையில், இருக்கின்ற நிலத்தையாவது எமது மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில், முழங்காவில் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் -
‘கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த விவசாய பூமி. இங்குள்ள ஒவ்வொரு குழி நிலமும் விவசாயத்திற்கு உட்படுத்தப்படல் வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று படையினர் வசம் போய் முந்திரிகைத் தோட்டமாகவும் பழத் தோட்டங்களாகவும் காணப்படுகின்றன. அவற்றின் பயனை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். ஆனால் எம்மவரோ இருக்கின்ற நிலங்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாது பற்றைக் காடுகளாக படரவிட்டு விட்டுச் சோம்பிக் கிடக்கின்றார்கள். இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.
இன்று எமது விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் விவசாய உற்பத்திகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரிய பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார். அவரின் வழிகாட்டலின் கீழ் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டு விவசாய உள்ளீடுகளைப் பெருக்கப் பாடுபட வேண்டும்.
அமைச்சர் டெனீஸ்வரனுடன் சேர்ந்து மீன்பிடி, போக்குவரத்து மேலும் பலவித மக்கள் நலம் கருதிய கைங்கரியங்களில் ஈடுபட்டு சமூக மறுமலர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து கொண்டு எமது வளங்களை முறையாக பயன்படுத்துவோமாயின் எமது எதிர்காலம் சிறப்புற அமையும்’ என்றார்.
CV in mulangavil (4) CV in mulangavil (2) CV in mulangavil (3) CV in mulangavil
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila