அடுத்த வருடத்திற்குள் மீள்குடியேற்றம் : ஐ.நா ஆணையாளர் உறுதி
அடுத்த வருடம் தாம் இலங்கை வரும்போது, அகதி முகாம் இருக்காதென்றும் அனைவரும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஐ.நா ஆணையாளர், சபாபதிபிள்ளை அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஐ.நா ஆணையாளர் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, இன்று பிற்பகல் கிழக்கு மாகாணம் செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு முதல்வர் ஆகியோரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comments