யாழ் சென்ற ஐ.நா ஆணையாளரை சி.வி வரவேற்றார் (இரண்டாம் இணைப்பு

UN COMMISSIONER MET CM (2)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். தற்போது வடக்கு முதல்வர் காரியாலயத்தில் ஐ.நா ஆணையாளர், வடக்கு முதல்வர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சந்திப்பையடுத்து, வடக்கிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் செல்லவுள்ள ஐ.நா ஆணையார், அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார். அத்தோடு வட மாகாண ஆளுநரையும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. அதனையடுத்து, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் திருகோணமலைக்கு செல்லவுள்ளதோடு, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று யாழ் விஜயம் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பல அதிகாரிகளை முதலமைச்சர் காரியாலத்தில் சந்திக்கவுள்ளதோடு, வடக்கு ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழ் நல்லூர் முருகன் ஆலயத்திற்கும் செல்லவுள்ளார். அதனையடுத்து பிற்பகல் 1 மணியளவில் யாழிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதோடு, பிற்பகல் இரண்டு மணியளவில் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள விமானப் படை முகாமை பார்வையிடவுள்ளார். பின்னர் கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட், ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்தோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சந்திக்கவுள்ளார். இதேவேளை நாளை கண்டிக்கு செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதோடு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்கர்களையும் சந்திக்கவுள்ளார். அதனையடுத்து நாளை மாலை கொழும்பு திரும்பும் அவர், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் முப்படை தளபதிகளை பாதுகாப்பு அமைச்சில் சந்திக்கவுள்ளார். அதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுடன், மனித உரிமை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
un commissioner jaffna visit (2)
un commissioner jaffna visit (3) un commissioner jaffna visit (1)
un commissioner (3)
UN COMMISSIONER MET CM UN COMMISSIONER MET CM (3) UN COMMISSIONER MET CM (2) UN COMMISSIONER MET CM (5) UN COMMISSIONER MET CM (4)
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila