உடைக்கப்பட்ட வீடுகள் மக்களுக்கு சொந்தமானது ஆவணங்கள் மீட்பு !

தொட்டலங்க பகுதியில் நேற்று மாலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பொலிஸார் தாக்கதலும் நடத்தியிருந்தனர்.
தமது குடியிருப்புகள் முன் அறிவித்தல் இன்றி அகற்றப்பட்டதன் காரணமாக தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே மேற்படி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத காணிகளில் வாழ்ந்தார்கள் என்ற காரணத்திற்காகவே மேற்படி வீடுகள் இடிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் அங்கு பதிவு செய்து வாழ்ந்து வந்தமைக்கான உறுதிபடுத்தும் ஆவணங்கள் தற்போது லங்காசிறி செய்தி சேவைக்கு கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், வாக்காளர் அட்டை, கிராம அலுவலர் பத்திரம், விண்ணப்பங்கள், தேசிய அடையாள அட்டை என்பனவும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் செய்தியார் மேலும் குறிப்பிட்டார். 
மேலும், அங்கு 285 குடும்பங்களுக்கும் மேல் மக்கள் வாழ்ந்த வந்த நிலையில், சுமார் 250ற்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது உடைக்கப்பட்டமையினால் பொதுமக்கள் நிர்கதியான நிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காணமாக நேற்று கொழும்பு களனி தொடக்கம் கிராண்பாஸ் வரையிலும் மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila