முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஊழல் மோசடி சம்பவமொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 5.22 மில்லியன் ரூபா பெறுமதியான 8000 ரீசர்ட்கள் தைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் தேடும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த பணத்தை செலவிட்டள்ளது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இந்த ரீசர்ட்கள் தைக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரச்சார நோக்கங்களுக்காக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்காக 25.29 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.