எது எப்படி இருந்த போதிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமான இறுதி தீர்ப்பு உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையின் ஊடாகவே வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் கேரளா குருவாயூரில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இந்திய ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான போன்ற நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் மாத்திரமல்லாது அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புகளும் பங்குபற்றுவதில் பிரச்சினைகள் இல்லை.
யுத்தத்தின் இறுதி காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்களை போர் நடந்த பகுதிகளுக்குள் அழைத்துச் சென்றனர். இதனால், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து எனக்கு தெரியாது.
போரில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக தண்டனை வழங்கும் இயலுமை உள்நாட்டு பொறிமுறைக்கு மாத்திரமே உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.