வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தால் காணாமல்போனோருக்கான அடையாளப்படுத்தல் சான்றிதழ்களை உறவினர்களிடம் வழங்குவது தொடர்பான தீர் மானம் ஒன்று பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சான்றிதழ் கண்ணில் காணாத சான்றிதழ் என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் வஜிர அபே குணர்வர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் காணா மல்போன தமிழ் மக்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என மாத்தறை மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்தி ரண பாராளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த அமை ச்சர் வஜிர அபேகுணவர்தன, இதற்காக கண்ணில் காணாத சான்றிதழ் என்ற பெய ரிலான சான்றிதழை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி யுத்தத்தினால் காணாமல்போன அனை வருக்கும் இந்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு அமைய, யுத்தத்தினால் காணாமல்போன அனைவருக்கும் இந்த சான்றிதழை வழங்க பாராளுமன்ற அனு மதி கிடைத்துள்ளது.
யுத்தத்தினால் காணாமல்போனோரின் உறவுகள், அவர்கள் தொடர்பான அனை த்து விடயங்களையும் இந்த சான்றிதழை கொண்டு முன்னெடுக்க முடியும் என பாரா ளுமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காணாமல்போனவர்களுக்கு வழங்கப்படும் இச் சான்றிதழ் ஓர் தற்காலிக அடிப்படையிலானதாகும்.
இந்த சான்றிதழ் காணாமல்போனவர்க ளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரச நிறு வனங்களில் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும்.
காணாமல்போனவர்களுக்காக வழ ங்கப்படும் சான்றிதழ் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தி ற்கு அவ் ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போனவர்களின் குடும்ப உறு ப்பினர்கள் காணாமல் போனவர்கள் உயிரி ழக்கவில்லை என கருதினால் அவர்கள், காணாமல் போய்விட்டார்கள் என அடிப்படை யில் சான்றிதழ் பெற்றுக்கொள்ள தகுதியு டையவர்களாக கருதப்படுகின்றது.