என்னதான் நடந்தாலும் பழக்கப்பட்டுப் போன ஒரு விடயத்தைக் கைவிடுவதற்கு தயாரில்லை என்பதுதான் இதன் அர்த்தம் பொதிகிறது.
அரசியல் பதற்றத்துடன் ஆட்சியை நடத்திப் பழகிப் போனவர்கள் அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும் அதேநிலையை ஏற்படுத்தி ஆளுமையைப் பறைசாற்ற முற்படுவதுதான் இன்றைய அரசியல் யதார்த்தமாகத் தெரிகிறது.
அதிகாரத்தில் உள்ளவர்களும் அரச இயந்திரங்களும் சுமுக ஆட்சி நடத்தும் போது, இனம்புரியாத அரசியல் பதற்ற நிலையை ஏற்படுத்த ஒரு குழு எடுக்கும் நடவடிக்கை மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்காத கேவலம் என்பதை மறுப்பதற்கில்லை.
நொந்து போன மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முயல்கின்ற போது, இனவாதக் குண்டுகளை வீசி குழப்பநிலை ஏற்படுத்துவதே இவர்களது இலட்சியமும் இலக்குமாக இருக்கிறது. யாரைக் கூறுகிறோம் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியும் அவரது சகபாடிகளும் இன்று செயற்படும் விதம் நாட்டை மோசமான நிலைக்கே கொண்டு செல்வதற்கு வழியேற்படுத்திவிடும்.
ஜனநாயக சூழலில் எதிரும் புதிருமான கருத்துக்களைத் தெரிவிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். என்றாலும், இனமோதல்களை உருவாக்கி ஆட்சியில் இருப்பவர்களை செல்வாக்கிழக்கச் செய்யலாமென நினைப்பதும் ஜனநாயக சூழலைக் குழப்ப முயல்வதும் கோழைத்தனமாகவே பார்க்க முடிகிறது.
10 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்த போது நடந்த ஊழல்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்த வேண்டியது தற்போதைய ஆட்சியாளர்களின் ஜனநாயக உரிமையாகும்.
மக்களின் பணம் மிக மோஷமாக சூறையாடப்பட்டிருப்பது விசாரணைகள் மூலம் தெளிவாகி இருக்கிறது. அரசியல் சாயம் பூசி இவைகளை மூடி மறைக்க முயற்சி செய்தாலும் யாருமே மக்களை ஏமாற்ற முடியாது.
ஊடகங்களின் கவர்ச்சிக்கும் கைதட்டல்களுக்கும் யாரும் எதுவும் பேசலாம். ஆனால், மகாஜனங்களின் தீர்ப்பு உறுதியானதாகவே இருக்கும் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.
பதவியிலிருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டவர் மஹிந்த ராஜபக்ச. அப்படியிருந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாக இருக்கிறது.
அது அவருடைய ஜனநாயக உரிமை என்றாலும் கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளையும் குளறுபடிகளையும் மறைப்பதற்காக தனது சகபாடிகளோடு கைகோர்த்து செயற்படும் விதம் நாட்டுக்கு களங்கத்தையே ஏற்படுத்தும்.
நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வது நல்லதல்ல. இப்போது அரசியலில் ஏற்பட்டிருக்கும் சூடுபிடிப்பு, தற்காப்பு அரசியலின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
விசாரணைகள் உத்வேகம் பெற்றிருக்கும் போது அதனை திசைமாற்றி காரம் குறைப்பதுதான் மஹிந்த அணியின் பிரதான பணியாக இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன மஹிந்த அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராக தேர்தல் களத்தில் குதித்த போது, அப்பம் சாப்பிட்ட கதை கூறி மறைமுகத் தாக்குதல் நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ச, இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாகத் தாக்கி வருகிறார். தனது புதல்வர் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதன் பின்பு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு தனே வந்தால்தான் தெரியும் என்பது போல, அரசியல் பழிவாங்கல் மூலம் பல பெரும்புள்ளிகளையும் அப்பாவிகளையும் கைது செய்து மேதாவித்தனத்துடன் விளக்கம் கூறிவந்த மஹிந்த ராஜபக்ச மகன் கைது செய்யப்பட்டதும் கண்ணீர் சிந்தியது மட்டுமல்ல, மிகவும் ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்கிறாரென்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
விசாரணைப் பொறிகளுக்குள் மாட்டிக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் சகாக்களும், அதிலிருந்து மீள்வதற்காகவே புதிய கட்சி ஆரம்பிக்கும் குண்டை வீசு ஆட்சியை நிலைகுலைய வைக்கலாம் என்பதே அவரது எதிர்பார்ப்பு. உண்மையில் நல்லாட்சி ஒன்று உருவாகுவதற்கு இந்த நாட்டு மக்கள் ஆணை வழங்கினர்.
பட்ட துன்பங்களும் வேதனைகளும் போதுமென்று பெருமூச்சுவிட்ட நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அமைதிச் சூழ்நிலையைக் குழப்ப முயல்வது தேசியத் தலைவரென்ற பெருமைக்குரியவராக இருக்கும் மஹிந்தவுக்கு நல்லதல்ல.
விசாரணைகளை நிறுத்துவதற்காக மஹிந்த அணி இன்னுமொரு யுக்தியையும் பயன்படுத்துகிறது. தங்களுக்குச் சாதகமான தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தி நாட்டில் நிர்வாக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறது.
சில தொழிற்சங்கங்களுக்கும் நிதியுதவி செய்து குழப்பத்தையும் பதற்ற நிலையையும் உருவாக்க மஹிந்த அணி முயல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசடிகளை நிறுத்தச் செய்ய வேண்டும். அல்லது முகம் கொடுக்க வேண்டும். இதுதான் மஹிந்த அணி எதிர்நோக்கும் பாரிய சவால். விசாரணைகளை நீதி., நேர்மையோடு எதிர்கொள்ளும் திராணி அவர்களுக்குக் கிடையவே கிடையாது என்பதே தெளிந்த உண்மை.
நாட்டை குழப்பியடிப்பது தான் மஹிந்த அணிக்குள்ள ஒரே வழியாக இருக்கிறது. மகனை விடுவித்து விசாரணைகளை நிறுத்துவதற்கு மஹிந்த அணி போடும் கபடத்தனங்களுக்கு மக்கள் பலம் இல்லையென்பது உண்மை.
ஆனாலும் இனவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை தன்வசப்படுத்தலாமென மஹிந்த, பசில், விமல் வீரவன்ச போன்றவர்கள் எடுக்கின்ற தப்புத்தாளங்கள் இனிமேலும் எடுபடுமென்று கூறுவதற்கில்லை.
30 வருடங்களுக்கும் மேலாகப் பட்டுத்தேறிய மக்களுக்கு இது புரியாமலில்லை. இனவாதமும் மதவாதமும் நடைமுறைச் சாத்தியமில்லாத போராட்டங்களும் நாட்டைச் சீரழிக்குமேயொழிய சுபீட்சத்தை ஏற்படுத்தாது.