
எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள வடக்கு
மாகாணசபை அமர்வுக்கு செல்லும் வடக்கு முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் மீது கழிவு ஒயில் வீசுவதற்கு சுமந்திரன் தரப்பு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இது தொடர்பாக நேற்று இரவே சில ஊடகங்களில் செய்தி கசிந்திருந்த நிலையில் இது தொடர்பில் மேலதிக தகவல்களை சேகரிக்க தமிழ் கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர்கள் விரைந்தபோது மேலும் பல அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிவந்துள்ளது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் வடக்கு மாகாணசபையின் சுமந்திரனால் இயக்கப்படும் இரு உறுப்பினர்களின் நேரடி கண்காணிப்பில் அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் ஆசனம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட இரு முன்னாள் பிரதேசசபை உறுப்பர்கள் சுன்னாகம் பகுதி சனசமூகநிலைய விளையாட்டுக் கழக இளைஞர்கள் சிலரை அழைத்த அவர்களிடம், வடக்கு மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள வரும் முதலமைச்சர், ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
வலிகாமம் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள கழிவு ஓயில் நீரில் கலப்பதற்கு வடமாகாணசபை அமைச்சரும் முதலமைச்சருமே காரணம் என்றும் அதனால் நாங்கள் அவர்களை சபையிலிருந்து ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக இளைஞர்களுக்கு வகுப்பு நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உங்கள் கழக வளர்ச்சிக்காக இவ்வாண்டு ஒதுக்கீட்டிலிருந்து சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் பெற்றுத்தருவதற்கு ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக குறித்த கழக இளைஞர்கள் தங்களது கழக அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்து சென்றனர். நேற்று மாலை குறித்த கழக இளைஞர்களுடன் வேறு சில இளைஞர்களும் கழிவு ஓயில் வீசுவதற்கு ஏற்பாடு செய்த உறுப்பினர்களைச் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது அந்த கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அங்கு வருகைதந்திருந்த மாகாணசபை உறுப்பினருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதோடு இதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி தரப்பு நின்ற விளையாட்டு உறுப்பினர்களிடம் ‘நீங்கள் கொஞ்சப் பேர் அங்கு வந்து சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களுக்கு காட்டினால் சரி, எங்கள் பெடியளும் வந்து நிற்பாங்கள், அவங்கள் ஒயிலடிப்பாங்கள்‘ என்றும் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் கொதிப்படைந்த விளையாட்டு கழக உறுப்பினர்கள ‘உங்கள் உட்கட்சி மோதலுக்கு எங்களைப் பகடைக்காயாகப் பாவிக்க முற்படுகின்றீர்களா? கழிவு ஒயில் ஊற்றுவது என்றால் முதலமைச்சருக்கும் விவசாய அமைச்சருக்கும் மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஊற்ற வேண்டும், உங்களை நாங்கள் வாக்குப் போட்டு மாகாணசபைக்கு அனுப்பியது உட்கட்சி மோதலைப் பார்த்து ரசிப்பதற்காக அல்ல, நீங்கள் ஆட்களை வைத்து இவ்வாறான செயற்பாடுகளைச் செய்துவிட்டு எங்களையும் பழிச் சொல்லுக்கு உட்படுத்த முனைகின்றீர்கள், இயக்கம் இருந்திருந்தால் உங்களை நிரையில் விட்டு சுட்டிருக்கும்‘ என கடும் சீற்றத்தில் இளைஞர்கள் கூறியதாகவும் இளைஞர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை இவர்களின் சந்திப்பை ஒழுங்கு செய்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என இளைஞர்களைக் நெருக்கிவந்ததாகவும் குறித்த இளைஞர்களின் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.