தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச கொள்கைகளின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வதே சிறந்தது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் ஹுசைன் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் øசைன் மற்றும் அவரது குழுவினர்கள் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் காலை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த வரு டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை அறிந்து கொள்வதற்காகவும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்காகவும், யாழில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள வருகை தந்துள்ளதுடன் சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள், காணிகளை பறிகொடுத்தவர்கள் சம்பந்தமாகவும், பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசுவதற்காக வருகை தந்திருந்தார்.
அதே நேரம், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் நேரத் தினை செலவிட முடியாமைக்கு தனது வருத்தத்தினையும் தெரிவித்துள்ளார். எனினும் நாம் தமிழ் மக்களின் பலவித பிரச்சினை களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எடுத்துக் கூறினோம்.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்ற ப் பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது அனைவரும் அறிந்த விடயம். இந்த விடயங்கள் அனைத்தினை யும் அவர் பகிர்ந்து கொண்டார். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கையை சர்வதேச கொள்கைகள் சரி என ஏற்றுக்கொள்ளவில்லை என் றும், சிரியாவில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தவறு என்று தான் கூறியதையும் எடுத்துக் கூறியுள்ளார்.
பொது மன்னிப்பிலும் விட குறித்த வழக்கு நடவடிக்கைகளை மிக விரைவில் நிறைவு செய்து விடுதலை செய்வதே சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வருகையினையும், தமது பொதுமன்னிப்பு விடயத்தினையும் ஒரு எதிர்பார்ப்பாக அரசியல் கைதிகள் காத்திருந்தார்கள். அந்த விடயத்தினை நான் நன்கு அறிவேன். அந்த எதிர்பார்ப்பினை ஆணையாளர் ஆழமாக தொட்டுச் செல்லவில்லை
இந்நிலையில் மேற்படி விடயத்தினை அரசியல் கைதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவ்வாறான நிலைப்பாட்டில் ஐ.நா ஆணையாளர் இருந்தால், அரசியல் கைதிகளின் வழக்கினை விரைவில் நடத்தி முடிப்பதற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள் ளேன். அந்த விடயத்தில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார் என நம்புகின்றேன்.
அந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இன்றைய கால கட்டத்தில் பல விதமான பிரச்சினைகள் இருந்தாலும், வடக்கும் தெற்கும் இணைந்து, நடவடிக்கைகளை எடுத்து இந்த பிரச்சினைக ளுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலனைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களின் நலன்தான் முக்கிய மென்றும், வலியுறுத்தினார் என முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், வடமாகாண விவசாயம் மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீ ஸ்வரன் உட்பட வடமாகாண கல்வி அமை ச்சர் த.குருகுலராஜா ஆகியோர் உடனிருந்தனர்.