நான் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தடவை வரும் போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அனை வரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி இருப்பார்கள் என நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கியநாடுகள் சபை யின் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல் øசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் உத்தி யோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள ஐக்கியநாடுகள் சபை யின் மனித வுரிமை ஆணையாளர், நேற்றையதினம் சுன்னாகம் சபா பதிப்பிள்ளை முகாம்களில் தங்கி யுள்ள இடம்பெயர் மக்களைசந்தித்து கலந் துரையாடியிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அடுத்த முறை நான் வரும் போது உங்கள் அனைவரினையும் சொந்த இடத்தில் சந்திப்பதற்கு விரும்புவதாக ஆணையாளர் கூறியதும், அங்கிருந்த மக்கள் அனைவரும் கைதட்டி கரகோசம் அளித்து ஆணையரின் கருத்தை வரவேற்றனர். மேலும் தமது இடங் களை விடுவிப்பதற்கு அரசிற்கு அழுத் தம் கொடுக்குமாறும் வேண்டினர்.
என்னை நீங்கள் சந்திப்பதற்கு வந்ததற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நான் பல நாடுகளிற்கு சென்றுள்ளேன். அங்கு பல தலைவர்கள், ஜனாதிபதி கள், பிரதமர்கள் ஆகியோரினை சந்தித்திருக்கின்றேன். ஆனால் இவர்களிலும் பார்க்க பாதிக்கப்பட்ட மக்களே முக்கியமானவர்கள்.
அவலங்களை இப்போதும் சந்தித்து கொண்டுள்ள மக்கள். இவர்கள் சார்பாக கதைப்பதே எனக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் உங்களை சந்திப் பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னைப்போல் பலர் இங்கு வந்து உங்கள் பிரச்சினைகளை சொல்லி சொல்லி சலிப்படைந்து இருப்பீர் கள் என்று எனக்கு தெரியும்,
ஆனால் உங்களுடைய பிரச்சினை களை இந்த அரசாங்கத்திற்கும், அரச அதிகாரிகளுக்கும் எடுத்து சொல்லி உங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. அதனை நான் சரிவர செய்வேன். அடுத்த தடவை நான் வரும் போது பெரும்பாலும் உங்கள் இடத்தில் தான் உங்களை சந்திக்க வேண்டும் என விரும்பு கின்றேன் என்றார் அவர்.