போர்க்குற்ற விசாரணையொன்று நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமையுமானால் அங்கு குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சரத் பொன்சேகா, அவசரம் அவசரமாக நாடாளுமன்றக் கதிரையில் அமர்த்தப்பட்டதன் நோக்கம் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்தி அவரைக் காப்பாற்றுவதே.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சு~;மா ஸ்வராஜ், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹ_சைன் ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பார்க்கப்படுகின்றன.
ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சனைகள் தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை போன்றவைகளில் இவர்களின் விஜயம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்லன என்பது கேள்விக்குரியது.
‘தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா உதவும்” என்று அமைச்சர் சு~;மா நாடு திரும்பும் முன்னர் தெரிவித்தார். இது ஒன்றும் புதிதல்ல.
இதனையே ஒவ்வொரு இந்திய பிரமுகர்களும் இலங்கை வந்து செல்லும்போது சொல்லி வந்ததால், இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன உறுதிமொழி.
1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டுச் செல்லும்போது ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? தமிழ்நாடு உட்பட இந்திய மாநிலங்களுக்குள்ள உரிமைகளிலும் பார்க்க கூடுதலானவைகளைக் கொண்ட ஆட்சியமைப்பை ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தியுள்ளதாக சொன்னார்.
இப்படிச் சொல்லி ஆண்டுகள் முப்பதாகின்றனவாயினும் பதின்மூன்றாவது திருத்தம்கூட இன்னமும் அமுலுக்கு வரவில்லை. வடக்கும் கிழக்கும் மகிந்த ஆட்சியில் பிரிக்கப்பட்டபோது இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருந்தது.
இந்திய அமைச்சரின் விஜயமானது, பலாலியில் சிவில் விமான நிலையத்தை விஸ்தரிக்கவும், காங்கேசன்துறையை அபிவிருத்தி செய்யவுமே ஏற்பாடானது என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானத்துறை அதிகாரிகள் குழுவொன்று விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
இப்போது இலங்கைப் படையினர் வசமிருக்கும் வடக்குத் தமிழரின் நிலப்பரப்பு விரைவில் இந்தியாவின் கைகளுக்கு மாறப்போகின்றது. இதுதான், ஷசுமுகமான தீர்வுக்கு இந்தியா உதவும்| என்பதன் உண்மையான அர்த்தம்.
மனித உரிமை ஆணையாளர் அல் ஹ_சைனின் நான்கு நாள் இலங்கை விஜயமானது ஜெனிவா தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டது.
2015 ஆகஸ்டில் அப்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனங்கள் தமது விஜயத்தின்போது காணப்படவில்லையென்பது இவருக்கு மகா மகிழ்ச்சி.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி ஜெனிவாவில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றம் உருவாக்குவது என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் இணை அனுசர
ணையாளராக இலங்கையே இருந்தது. இதனால் சகல நாடுகளும் ஏக மனதாக இத்தீர்மானத்தை ஆதரித்தன.
கலப்பு நீதிமன்ற விசாரணை வெளிநாட்டு நீதிபதிகளையும் சட்ட வல்லுனர்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்பது தீர்மானத்தின் அர்த்தம்.
ஆனால் வெளிநாடுகளின் பங்களிப்பு என்பது நேரடியாக விசாரணையில் அவர்களை ஈடுபடுத்தாது, வெளியில் வைத்து ஆலோசனையைப் பெறுவது என்று அர்த்தம் கொள்ள இடமுண்டு.
இத்தகைய அர்த்தத்தையே இலங்கை உள்வாங்கியிருந்தது என்பதை அது அடிக்கடி விடும் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் ஊடாக உணர முடிகிறது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறுதியாகவும் உறுதியாகவும் கூறி வருகிறார்.
இவரது அமைச்சர் பட்டாளமும், பிரதமரும்கூட இதனையே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கக் கூடாதென்றும், படையினரைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கோரும் மனுவுக்கு பத்து இலட்சம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கையில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுன்ளார்.
மொத்தத்தில் ஜெனிவாத் தீர்மானத்தை குப்பைக்குள் போட்டு நெருப்பு மூட்டுவதில் சிங்களத் தலைவர்களுள் ஒரு போட்டியே ஆரம்பமாகிவிட்டது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது இராணுவத் தளபதியாக இருந்து போர்க்குற்றங்களின் முக்கியமானவராகக் காணப்பட்ட சரத் பொன்சேகா, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாராயினும் இப்போது ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலூடாக அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியுள்ளது.
பதவியேற்பு உரையின்போது அவர், ‘போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு தேவை”யென தெரிவித்துள்ளதோடு, நம்பகமான விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று கூறியிருப்பதன் பொருளானது வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, கண்காணிப்பாளர் போதும் என்பதாகும்.
ஜெனிவாத் தீர்மானம் கூறும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்மறையானதாகவே இவரது கருத்து அமைந்துள்ளது.
போர்க்குற்ற விசாரணையொன்று நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமையுமானால் அங்கு குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சரத் பொன்சேகா, அவசரம் அவசரமாக நாடாளுமன்றக் கதிரையில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன் வழியாக கிடைக்கும் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.
போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று தமது கருத்தை வெளியிட்டுள்ளார் மக்ஸ் பரணகம.
மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டு மைத்திரியால் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் விசாரணைக் குழுவின் தலைவரே இவர்.
முன்னாள் நீதிபதியான பரணகம சர்வதேச நீதிபதிகளைக் காண அஞ்சுவதன் காரணமென்ன? தம்மால் மூடிமறைக்கப்படும் உண்மைகளை கலப்பு நீதிமன்றம் கண்டுபிடித்து விடுமென நினைக்கிறாரா?
ஜெனிவாத் தீர்;மானத்தின் அமுலாக்க முன்னேற்ற அறிக்கைகளை இந்தாண்டு ஜூன் மாதத்திலும் அடுத்தாண்டு மார்ச் மாதத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பு அல் ஹ_சைனுக்குரியது.
அதனால், ஜெனிவாத் தீர்;மான அமுலாக்கத்தை ஐ.நா. தொடர்ந்து கண்காணிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய இலங்கை, ஜெனிவாத் தீர்;மானத்தின் இணை அனுசரணையாளராக இருந்தமையால் அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டிய இக்கட்டுக்குள் அகப்பட்டுள்ளது.
இலங்கை அரசு என்ன செய்யப் போகிறது? தீர்மான நாயகனான அகில உலக காவற்காரன் என்ன செய்யப் போகிறார்? எல்லாமே ஷபெப்பே| தானோ?