பதில் சட்டமா அதிபர் சுஹத கம்லத்தினால் இவர் குறித்த வழக்கிலிந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு, பெரிதாக அனுபவமற்ற சட்டத்தரணி வசந்த பெரேராவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் நேற்று (திங்கட்கிழமை) சட்டத்தரணி வசந்த பெரேராவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரகீத் காணாமல் போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டமைக்கு, கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தவரே அரச சட்டத்தரணி திலீபா பெரேரா.
சட்டத்தை மதிப்பவரும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதவருமாக கருதப்படும் திலீபா பெரேரா, சிவில் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவரென அறியப்படுபவர். அத்தோடு, எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர். இவ்வாறான காரணங்களாலேயே பிரகீத் வழக்கிலிருந்து திலீபா பீரிஸ் நீக்கப்பட்டு அனுபவமற்ற ஒருவர் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணையில், அவர் கொலைசெய்யப்பட்டமை ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சம்பவத்துடன், இராணுவ புலனாய்வு பிரிவினரே தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.