வடமாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்னேஷ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் யாப்பு முன்வரைவு திட்டத்தை கடந்த 31-1-2016 அன்று முன்வைத்துள்ளது. இந்த அரசியல் யாப்பு முன்வரைவுத் திட்ட வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென திரு.சம்பந்தன், திரு.சுமந்திரன் என்போருக்கு ஆதரவான வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் திரு.விக்னேஷ்வரனை கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் அதனையும் மீறி திரு.விக்னேஷ்வரன் இதில் கலந்து கொண்டு மேற்படி அரசியல் யாப்பு முன்வரைவை வெளியிட்டு வைத்தார்.
தமிழ் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் தீர்வை தாம் முன்வைக்கப் போவதாகவும் அதற்கென ஒரு புதிய அரசியல் யாப்பு வரையப்படும் என்றும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சிறிசேன-ரணில்-சந்திரிகா அணியினர் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர். இக்கோரிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்றது.
இதன்படி தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் திரு.மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து அவரை வெல்ல வைத்தனர். அவர்கள் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க தமிழ் மக்கள் பேருதவியாய் அமைந்தனர். அதாவது நல்லாட்சி என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடிந்தது தமிழ் மக்களின் வாக்குக்களாளேயாகும்.
இந்திய-அமெரிக்க அரசுகளின் உத்தரவாதத்தின்படி ஆட்சி மாற்றத்;திற்கு உதவுமாறு தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் பொதுத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணிலை பிரதமராகவும் ஆக்கினர்.
பலத்தை எதிர்பார்க்கைகளின் மத்தியிலும், நம்பிக்கைகளின் மத்தியிலும் தமிழ் மக்கள் இவ்வாறு வாக்களித்து அவர்கள் கேட்ட நல்லாட்சிக்கான அரசாங்கத்தை அமைக்க உதவிய போதிலும் அந்த நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஓராண்டுகால நடைமுறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பார்கைகளுக்கு மாறாகவே நடந்து கொண்டது.
பிரதமர் திரு.ரணில் விக்ரமசிங்காவும், முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்காவும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல்தின விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அவர்களுடன் கூடவே கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஷ்வரன் அவர்கள் முன்னிலையில் உரையாற்றும்; போது கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பார்க்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லையென பட்டியலிட்டுக் காட்டினார். இப்பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
மேற்படி நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்தின் பின்பும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தமிழ் மக்கள் இவ் அரசாங்கத்திடமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் நம்பிக்கையற்றவர்களாயினர். இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சிறிசேனாவின் இரண்டு பேச்சுகள் அமைந்தன.
அதாவது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தேசிய பொங்கல்தின விழாவில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது காணாமற் போகச் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் மீளமுன்பு ஜனாதிபதி சிறிசேன மேலும் இரண்டு அதிர்ச்சிக் குண்டுகளைத் தமிழ் மக்கள் மீது தூக்கிப் போட்டார்.
அதாவது போர்க்குற்ற விசாரணையில் எவ்வித வெளிநாட்டு கலப்பு விசாரணை முறைக்கும் இடமில்லை என்று கூறினார். இந்த அதிர்ச்சி அலையைத் தொடர்ந்து இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டார். அதன்படி சமஷ்டி ஆட்சி முறையிலான தீர்வு என்பதற்கு அறவே இடமில்லை, ஒற்றையாட்சி முறைக்குள்தான் தீர்வுகாண்பதற்கான ஏற்பாடுகள் புதிய அரசியல் யாப்பில் செய்யப்படும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இத்தகைய பின்னணியில் கடந்த 31ஆம் தேதி தமிழ் மக்கள் பேரவை தனது உத்தேச அரசியல் யாப்புத் தீர்வுத் திட்ட முன்வரைவு நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள திரு.சம்பந்தம், திரு.சுமந்திரன் ஆதரவாளர்கள் சிலர் முட்டுக்கட்டை போடும் விதத்தில் செயற்படத் தொடங்கினர். அவர்களது முதலாவது முயற்சியானது இவ்வெளியீட்டு விழாவில் விக்கேஷ்வரனை தடுக்க முடியாது போனதோடு தோல்வியடைந்தது.
இப்போது தமிழ் மக்கள் இருமுனைகளில் போராட வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை இவை காட்டுகின்றன. ஒன்று இன ஒடுக்குமுறை புரியும் ஏமாற்றுகரமான ரணில்-சிறிசேன-சந்திரிகா அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய முதல்நிலைத் தேவை. இரண்டு கூடவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக சிறிசேன-ரணில்-சந்திரிகாவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் சம்பந்தன் – சுமந்திரன் அணிக்கு எதிராகவும் செயற்பட வேண்டிய நிலை.
இன்றைய நிலையில் இந்த இருமுனைப் போராட்டத்தை நிகழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்தான். இத்துணை பேரழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் உள்ளான பின்பும் இந்த இழப்புக்களை முதலீடாக வைத்து தமக்கான சுயநல அரசியலை நடாத்தும் இந்த கும்பலை எண்ணி வேதனைப்படாது இருக்க முடியவில்லை.
இப்போது இந்த கும்பலின் செயல் திரு.விக்னேஷ்வரனை மேற்படி அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவை வெளியிடாமல் தடுக்க முற்பட்டதன் மூலம் மேலும் அம்பலமாகியுள்ளது. இத்திட்டம் முறியடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் மிகக் கடினமான ஒரு பாதைக்கு ஊடாக பயணிக்க வேண்டிய ஓர் அவலத்தை தெளிவாக காட்டி நிற்கின்றது.
சுமாராக ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பின்பும் இப்படி இந்த படுகொலைக் களத்தை தமது சொந்த வயிற்று வளர்ப்புக்காக பயன்படுத்தும் ஒரு கூட்டம் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது வியப்பையும், வேதனையும் அளிக்கிறது.
“யாழிசை” என்ற தலைப்பில் அரசியல் சிறைக்கைதி திரு. சிவ ஆரூரன் என்பவரால் எழுதப்பட்டு கடந்த வாரம் வெளிவந்துள்ள நாவலானது ஒரு பெண் போராளியின் சிறைக்குப் பின்னான சமூக வாழ்வை சித்தரிக்கும் சிறந்த நாவலாக உள்ளதென்று விமசகர்களால் கூறப்படுகின்றது. விடுதலைக்காக போராடிய இப் பெண் பாத்திரம் தன் சிறைவாழ்வின் பின்பும் சமூக உணர்வுடனும், இலட்சியத் தாகத்துடன் செயற்படுவதை இந்நாவல் சித்தரிப்பதாக கூறப்படுகிறது.
இப்பின்னணியில் மேற்படி போராட்டத் தியாகங்களை தம் வயிற்று வளர்ப்புக்காக பயன்படுத்தும் மேற்படி கும்பலை நினைக்கும் போது தமிழ் மக்களின் எதிர்கால வரலாறு ஒரு பெரும் கேள்விக்குறியாய் தொங்குகிறது.
இன்றைய நிலையில் அதிக இலட்சியத்துடனும், தமிழ் மக்கள் மீதான பற்றுருதியுடனும், முன்னுதாரணத்துடனும் தமிழ் மக்களும், தமிழ் இளைஞர், யுவதிகளும் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் போராட்டம் நீதிக்கான போராட்டம். இந்த நீதிக்கான போராட்டத்தை யாரும் விலைகூறி விற்க அனுமதிக்க முடியாது. ஆதலால் முன் எப்பொழுதையும்விட தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் அதிகம் விழிப்புடனும், முன் யோசனையுடனும், தீர்க்கத்தரிசனத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டிய காலகட்டமாய் இது உள்ளது.
இப்பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அரசியல் யாப்பு முன்வரைவு யோசனை அரசியற் தீர்வு சம்பந்தமான கோரிக்கையை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கியுள்ளது. இந்த உத்தேச யாப்பு முன்வரைவில் அடங்கியுள்ள விடயங்கள் போதும், போதாமை என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய ஒரு விழிப்பை இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூக்கத்தை கலைத்து, பின்கதவு அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.
மேற்படி அரசியல் யாப்பு முன்வரைவானது “இறைமையுள்ள சுயாட்சி” என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும், “ஒரு நாடு இரு தேசம்” என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கைக்கு அதிகம் கீழ்ப்பட்டதாகவே உள்ளது. ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இனவாதத்திற்கு சாதகமான ஒத்தோடி அரசியலை முடிவுக்குக் கொண்டுவர இதனால் உதவ முடியும்.
இறைமையுள்ள சுயாட்சி என்பது முழுமையான சமஷ்டி முறையையும் தாண்டிய ஒரு ஊழகெநனநசயவழைn முறையைக் கொண்டதாகும். அதாவது சமஷ்டி முறை (குநனநசயவழைn) என்பது கூட்டாட்சியாகவும், ஊழகெநனநசயவழைn என்பது இணைப்பாட்சியாகவும் இருக்கும்.
சுமஷ்டி முறையின் உச்சம் ஊழகெநனநசயவழைnஆக அமையும். ஆனால் இங்கு தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுத் திட்டம் சமஷ்டி முறையின் தொடக்க நிலைதான். எவ்வாறேனும் இந்த திட்டத்தைக்கூட சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இப்படிப்பட்ட ஒரு தொடக்க நிலை சமஷ்டி தீர்வு யோசனையைக்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு கும்பல் முட்டுக்கட்டை போடுகிறது.


