கணவரைக் கடத்திய வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன் (வாகன இலக்கத்தை குறிப்பிட்டு மனைவி சாட்சியம்)


எனது கணவரை கடத்திய 50 - 7062 இலக்க வாகனத்தை கொழும்பு கொவல பொலிஸ் நிலை யத்தில் கண்டேன் என கணேசு சதாசிவத்தின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுமுன் சாட்சியமளித் துள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பாக விசா ரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வவுனியா பிரதேச செயல கத்தில் நேற்று சாட்சியமளிக்கும் போதே மனைவி இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,

நானும் எனது கணவர் மற்றும் பிள்ளை கள் கொழும்பு, களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தோம். கடந்த 2007 ஆம் ஆண்டு  யூலை மாதம் 15 ஆம் திகதி இரவு 9 தொடக்கம் 10 மணிக்கிடையில் எமது வீட்டின் கதவை தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது எனது தம்பி கதவைத் திறந்தார்.

வீட்டிற்குள் நுழைந்த 5, 6 பேர் எனது கணவரை கூப்பிட்டார்கள். நாம் நீங்கள் யார் என கேட்டோம். தாம் பொலிஸ் என கூறி எனது கணவரின் அடையாள அட்டை, பொலிஸ் வதிவிடச் சான்றிதழ் என் பவற்றை பார்த்துவிட்டு எனது கணவரை பிடித்து இழுத்துச் சென்றார்கள். 

நாங்கள் விடும்படி கதறினோம். எம்மை வீட்டுக்குள் விட்டு பூட்டிவிட்டு கணவனை இழுத்துச் சென்றார்கள். அதன்பின் எனது கணவனை 50 - 7062 இலக்க வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதைக் கண்டோம். நாம் வெள்ளவத்தையில் இருந்த எனது அப்பாவை வரவழைத்து  கதவைத்திறந்து கொவல பொலிஸ் நிலையம் சென்று விசாரித் தோம். அவர்கள் கணவரை பிடிக்கவில்லை எனக் கூறினார்கள். 

அதன் பின் எனது கண வரை கொண்டு சென்ற வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன். அதைச் சென்று பார்த்த போது அதற்குள் வேறுபலர் இருந்தார் கள். அதற்குள் எனது கணவனை காண வில்லை. எப்படியாவது எனது கணவரை கண்டு பிடித்து தாருங்கள். அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கண் ணீர் மல்க சாட்சியமளித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila