50 ஆண்டுகளுக்கு பின்னர் மியான்மாரில் புதிய அதிபர் பதவியேற்பு!

மியான்மரின் புதிய அதிபராக, ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூசியின் நெருங்கிய உதவியாளரான, ஹிடின் கியா, 69, நேற்று பதவியேற்றார்.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. இங்கு, ஜனநாயக ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, ஆங் சான் சூசியின் தேசிய ஜனநாயக கட்சி, பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடியது.mianmar
இந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக, கடந்தாண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட்
தேர்தலில், தேசிய ஜனநாயக கட்சி, 80 சதவீத இடங்களை கைப்பற்றியது.எனினும் மியான்மரில் திருத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் படி, ஆங் சான் சூசி, அதிபராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது நெருங்கிய உதவியாளரான ஹிடின் கியா, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர், மியான்மரின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.அவர் கூறுகையில், ”மியான்மர் மக்களுக்கு, உண்மையுடன் இருந்து என் கடமையை சரிவர நிறைவேற்றுவேன்,” என்றார்.
மியான்மரில், 50 ஆண்டுக்கு பின், ராணுவத்தைச் சாராத ஒருவர் அதிபராவது
இதுவே முதல் முறை. ஹிடின் கியா, அடுத்த ஐந்து ஆண்டுக்கு பதவியில் நீடிப்பார். ”அதிபராக முடியாவிட்டாலும், அரசை வழிநடத்துவேன்,” என, ஆங் சான் சூசி உறுதியளித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila