அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெற்ற பலாலி பகுதிகளில் கல் அகழ்வு, மற்றும் சட்டவிரோதமாக காட்டுமரங்களை கடத்துதல் போன்றவை இடம்பெறுவதாக தெரிவித்துள்ள மக்கள் பொலிஸாரிடம் தாங்கள் இது குறித்து முறையிட்டுள்ள போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பலாலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன, இரவுவேளையில் பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வேம்பு பலா போன்ற மரங்கள் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுதவிர வெளிநாட்டில் வாழும் குடும்பங்களின் காணிகளில் சட்ட விரோதமாக கல் உடைப்பது நடைபெறுகின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் குறிப்பிட்ட சட்டவிரோ நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை தப்பவிடுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.