இன படுகொலை..... சில படங்களே இணைக்கப்பட்டு உள்ளது
Home
» Breaking News
» Events
» தமிழின அழிப்பு நாளின் 7வாது ஆண்டு நினைவு நாள்!- பிரித்தானியவில் அணிதிரளுங்கள்!
தமிழின அழிப்பு நாளின் 7வாது ஆண்டு நினைவு நாள்!- பிரித்தானியவில் அணிதிரளுங்கள்!
Posted by : srifm on Breaking News, Events On 02:28:00
தமிழின அழிப்பு நாளின் 7 – வாது ஆண்டு நினைவு நாள் இம் முறை , பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் இடம் பெற உள்ளது.
தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் சிறீலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாட்டையும் பிரித்தானிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் தெரிவித்து அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை 5 மணியளவில் இடம்பெற உள்ளது. அனைத்து பிரித்தானியா வாழ் மக்களும் ஒரு அணியாக தமிழீழ தேசியக்கொடியுடன் டவுனிங் வீதிக்கு வந்து , எமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முள்ளவாய்க்கால் 7 வது ஆண்டு மே 18 தமிழின அழிப்பு நாள் என்பது ஒவ்வொரு தமிழர்களுடைய உள்ளங்களை நொருங்கச்செய்த நாட்களாகும். ஈவிரக்கமற்ற ஒரு காட்டுமிராண்டி மக்களையும், இராணுவத்தையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஒரு அரசும், அதன் தலைவர்களும் எவ்வாறு மனிதர்களாக நல்வர்களாக வெளிஉலகிற்கு தம்மைக்காட்டிக் கொண்டு திரிகின்றார்கள் என்பதற்கு சிறீலங்கா அரசும், அதன் கொடுங்கோல் ஆட்சிக்கு துணைபோகின்றவர்களையுமே நாம் பார்க்க முடியும. அன்பையும், அகிம்சையை காட்டிய புத்தபகவானையும், யேசுவையும் பின்பற்றுகின்றவர்களா 21ம் நூற்றாண்டில் இப்படியொரு மனிதப்படுகொலையை நடாத்தினார்கள். இவர்களை நாம் சும்மா விட்டுவிடுவதால் பூமித்தாய்க்கும், தமிழீழத்தாய்க்கும் செய்யும் பெரும் துரோகமாகும். எனவே இவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். அதனை தெரியப்படுத்தும் ஒரு நாளே இந்த தமிழின அழிப்புநாள் அனைவரும் அணிதிரளுங்கள்.
இன படுகொலை..... சில படங்களே இணைக்கப்பட்டு உள்ளது
இன படுகொலை..... சில படங்களே இணைக்கப்பட்டு உள்ளது
Add Comments