சமஸ்டியேயல்ல – வடக்கு முதலமைச்சர்!

vigneswaranதமிழ் மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர் என்பதற்கான அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்ற பேரலைதான் என வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை இது காறும் செய்த சேவை மகத்தானது. நாம் தொடங்கிய இந்தசெயற்பாட்டால் ஏற்பட்டுள்ள நன்மைகளை நாம் பரிசீலித்தோமானால் நில மட்ட மக்களுடன் கலந்துறவாடி  அரசியல்தீர்வு சம்பந்தமான அறிவை அவர்களுக்குப் புகட்டி அதேநேரம் அவர்களிடம் இருந்து அவர்களின் அனுபவத்தின் வாயிலாக அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை நாம் பெற்று நாமும் பயன் பெற்றுள்ளோம்.
அடுத்து எமது அரசியல் வானிலே ஒரு விடிவெள்ளியைப் பவனிவர வைத்துள்ளோம். தமிழ் மக்கள் பேரவையானது உறங்கிக் கிடந்த எம்மவர்களை உசுப்பேத்திவைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
எப்பொழுதுமே தெற்கில் வசிக்கும் எம்மவர்களுக்கு வடகிழக்கில் வாழும் எம்முடன் ஒரு கருத்து வேறு பாடுஉண்டு. “சூழலுக்கு ஏற்ப எம்மைமாற்றிக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் சூழல் எங்களை விழுங்கிவிடும்” என்ற அவர்களின் எண்ணமே அது. பல இனக் கலவரங்களுக்கு அவர்கள் அங்குமுகங் கொடுத்ததாலோ என்னவோ சூழலைக் கவனித்தே தமது கருத்தை வெளிப்படுத்துவர்.
நாங்கள் ஒரு முக்கியமான விட யத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். உண்மையை, யதார்த்தத்தை வெளியிடுவதற்கு நாங்கள் பின்னற் கலாகாது. ஏனென்றால் எமது தேவைகளைநாங்கள் உண்மைக்கு மாறாகக் குறைத்து விளம்பினால் எமது கஸ்டங்களை மற்றவர்கள் அறியமுடியாது போய்விடும். எமது வலியை, எமது வேதனையை, எமது தேவைகளை, எமது அபிலாஷைகளை அறியாமலே மற்றவர்கள் வாழ்க்கை நடத்துவார்கள். இன்று அப்படித்தான் தெற்கில் மக்கள் வாழ்கின்றார்கள்.
மூன்றாவதாகச் சிங்களத் தலைவர்கள் எமது தேவைகளை, மனோநிலையை, எதிர்பார்ப்புக்களை அறியாதவர்கள் அல்ல என்பதை நினைவுறுத்தவிரும்புகின்றேன். ஆனால் எமது தமிழ் மக்கள் பேரவையின் மூலமாகத் தமிழ் மக்களின் எண்ணப்பாடுகள் வெளி வருகின்றன என்றதும் அவர்கள் சற்று அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள். எப்படியாவது எம்மைத் தீவிரவாதிகளாய்ப் பட்டம் சூட்டிக் கலைத்துவிடலாம் என்று எண்ணு கின்றார்கள். ஆனால் நாங்கள் தீவிரவாதக் கருத்துக்களுக்கு இடங் கொடுக்காது யதார்த்தமான தீர்வை நோக்கி எமது கருத்துக்களை முன் வைத்ததால் அவர்கள் சற்றுத் தடு மாறுகின்றார்கள்.
தந்தை செல்வா 1972-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தான் கூறு வதைத் தமிழ் மக்கள் புதிய தொரு தேர்தலில் ஏற்றால் அரசாங்கம் அர சியல் யாப்பைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் தான் தோற்றால் அதன் பின் அரசியலிலிருந்து தான் வெளியேறிக்கொள்வதாகவும் அறிவித்தார். 1975 பெப்ரவரிவரை தேர்தலைப் பின்போட்டுக் கொண்டு போனது இலங்கை அரசாங்கம். ஏனென்றால் எமது எதிர்பார்ப்புக் களை அரசாங்கத் தலைவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். அதன் பின் தேர்தலை நடத்திய போது தந்தை செல்வா அபார வெற்றி பெற்றார்.
இடது சாரியான திரு.வி.பொன்னம்பலம் அவர்கள் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டார். தேர்தலைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்த தற்குக் காரணம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இன்றும் சிங் கள அரசியல் தலைவர்கள் அறிந்து கொண்டிருந்தமையே. ஆகவே எமது எதிர்பார்ப்புக்களைச் சிங் களமக்கட் தலைவர்கள் இன்றும் அறிந் தேயுள்ளார்கள் என்று கருது கின்றேன். எம்மை நாமே ஆள வேண்டும் என்றுநாம் கூறுவதில் அவர்கள் பிழை கண்டுபிடிக்க வில்லை.
எங்கே நாங்கள் சமஸ்டி பெற்றபின்னர் பிரிவினைக்கு வழி அமைத்து விடுவோமோ என்பது தான் அவர்களின் பயம். உல கத்தில் வேறெங்கும் சிங்கள மக் கள் வாழவில்லை. தமிழர்களுக் கும் முஸ்லிம்களுக்கும் இடம் கொடுத்தால் அவர்கள் எம்மை இல்லா தொழித்துவிடுவார்கள் என்று எண் ணுகின்றார்கள். அவர்கள் சந்தே கங்களைப் போக்குவது எமது கடப்பாடாகும்.
எனவேதமிழ் மக்கள் பேரவை மக்களுடன் கலந்தாலோசித்து அரசியல் கருத்துக்களை முன்வைத்துள்ளது. அன்று தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் எம்மைப் பார்த்து இன்று எழுந்து நடமாடத் தொடங் கியுள்ளார்கள். தமிழ் மக்கள் ஏகோ பித்தவாரியாக சமஸஷ்டியை வேண்டு வதால் அதுபற்றிஆராயத் தொடங் கியுள்ளார்கள். நாம் எமதுக் கடமை களைச் சரிவரச்செய்ய உறுதி பூணுவோம்.
நேற்றைக்கு முன்தினம் ஜேர்மனியில் இருந்துவந்த பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தேன். சமஷ்டி பற்றிகதை வந்த போது தங்கள் நாட்டில் சமஸ்டி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் அரசரீதியான அலகுகள் எல்லாம் செவ்வனே சுமூகத்துடன் செய லாற்றுகின்றன என்றும் கூறினார்கள். அதைத் தயவுசெய்து எங்கள் சிங்கள மக்கள் தலைவர்களுக்குச் சொல்லிவையுங்கள் என்று கூறி னேன். செய்வதாக வாக்களித்தார்கள். இவ்வாறுதான் தெற்கின் தலைவர்களின் மனோநிலையை மாற்ற வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை கலை, கலாசாரம் போன்ற மற்றையவிட யங்களிலும் மக்களிடையே தமது பார்வையைச் செலுத்துவது சாலச் சிறந்தது. தமிழ் மக்கள் விழித்துக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்றபேரலை. அது சுனாமி போன்ற அலை அல்ல. மிகச்சாதுவான அலை. அதனை எம்மக்கள் தம் மிடையே பரவிவிரவ இடம் அளிப்பதால் அரசியல்;கட்சி மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
மாறாக எமது மக்கள் உண்மையை உணரத் தொடங்குவார்கள். எமது பாரம் பரியங்கள் பற்றிஅறியத் தொடங்கு வார்கள். எமது இலட்சியங்களைப் பாதுகாக்க முன் வருவார்கள். ஒற்று மைக்கு வித்திடுவார் களென அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila