சுமந்திரனின் US Hotel ஒப்பரேசன் -2 கையெழுத்து வேட்டை ஆரம்பம்


சற்றும் மனந்தளராத சின்னக்கதிர்காமர் தனது 
US hotel ஒபரேசனை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் கசிந்திருந்த நிலையில் இன்றைய தினக்குரல் அதனை உறுதி செய்துள்ளது. 

முதலமைச்சருக்கும் மாகாண அமைச்சர்களுக்கும் தொடர்ந்தும் குடச்சல் கொடுக்கும் வேலையினை சுமந்திரன் தொடர்ந்தும் ஆற்ற தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. முதலமைச்சருக்கு எதிராக ஆரம்பித்த திட்டங்கள் எவையும் நிறைவேறாத நிலையில் தற்போது மாகாண சபை அமைச்சர்களை குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டிருக்கிறது.

இதுவரை சர்வதேச விசாரணை வேண்டும் என்றோ,  மக்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றோ,இனப்படுகொலை தான் நடந்தது என்றோ,அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றோ ,ஒற்றையாட்சியை நீக்க வேண்டும் என்றோ US hotel இல் கூட்டம் போட்டு கையொப்பம் பெறப்படாத நிலையில் வடமாகாணசபை நிர்வாக வேலைகளை குழுப்பும் செயற்பாடுகளை சுமந்திரன் தொடர்ந்தும் முன்னெடுத்துவருவது இங்கு நோக்கத்தக்கது.

இதனை முன்லைத்தீவை சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் முன்னணியில் இயங்குவதாகவும் இவை எதிர்வரும் 7ஆம் திகதி முதல்வரிடம் கையளிக்கப்படவிருப்பதாகவும் கிங்டொத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila