இந்த யுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே இனப்பிரச் சினைக்கு நாம் விரைந்த தீர்வை காணவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 1956 எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தவில்லை என்பதுடன், ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அவரிடம் காணப்பட்ட பொறுமை, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் சவால்களின் முன் அஞ்சாது முன்னோக்கிச் செல்லும் விசேட பண்புகள் தற்போது அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் முன்மாதிரியாக காணப்படு வதுடன், இது தற்போது அத்தியாவசியமான ஒரு விடயமாக காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க அம்மையார் நாட்டுக் காக மேற்கொண்ட வரலாற்றுப் பெறுமதிமி க்க கடமைப் பொறுப்பானது அப்போது இரு ந்த தேவைகளுக்கமையவும் சர்வதேச ரீதி யிலும் மிக முக்கியமானதாக காணப்பட்ட தாக தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளின் போது நாட்டுக்கா கவும் கட்சிக்காகவும் அன்னார் கண்ணீர் சிந்திய சந்தர்ப்பங்களை தனது அரசியல் அனுபவங்களில் காணமுடிவதாக தெரிவித்தார்.
மேலும் நீண்டகாலமாக தொடர்ந்திருந்த கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ள இந்த சூழ்நிலையில்,
இனப்பிரச்சினைக்கு இப்போதும் தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே இனப்பிரச்சினைக்கு நாம் விரைந்து தீர்வு காணவேண்டியது அவ சியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் நடத்துவதற்கு உடன்படிக்கையை செய்து கொண்டு வழிகாட்டியவர் மகிந்த ராஜபக்ஷவே ஆவார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஜனாதிபதி; உள்ளிட்ட குழுவி னர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மை யாரின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலு த்தியதன் பின்னர் நினைவுதின வைபவம் ஆரம்பிக்கப்பட்டது.
சிறிமாவோ நூலின் சிங்கள, தமிழ் பிரதி கள் சுனேத்திரா பண்டாரநாயக்கவினால் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்ப ட்டதுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க இணை யத்தளம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்க ப் பட்டது.
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் நூற்றாண்டு ஜனன தின வைபவத்தி ற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை யினை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிக ழ்வும் இங்கு இடம்பெற்றது.
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மை யாரின் நூற்றாண்டு ஜனன தின வைபவத்து டன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் நட த்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டி யவர்களுக்கு ஜனாதிபதி பரிசி ல்களை வழங்கிவைத்தார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, பண்டாரநாயக்க குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.