அரசியலமைப்புச் சபைக்கான அங்கத்தவர்கள் நியமிப்பு (இரண்டாம் இணைப்பு)

constitutional coun
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டனர்.


அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படும் நிலையில், அவர் இல்லாத சந்தர்ப்பங்களில் இயங்குவதற்காக 7 உபதலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவராகக் கொண்டு, சகல கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழுவும், இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது.
உபதலைவர்கள் மற்றும் வழிநடத்தல் குழுவிற்கான பெயர்களை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழிமொழிந்தார். அவர்களது பெயர் விபரம் வருமாறு-
உபதலைவர்கள்
♦ திலங்க சுமதிபால
♦ செல்வம் அடைக்கலநாதன்
♦ கபீர் ஹாசீம்
♦ சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
♦ திலக் மாரப்பன
♦ நலிந்த ஜயதிஸ்ஸ
♦ மஹிந்த யாப்பா அபேவர்தன
வழிநடத்தல் குழு
♦ ரணில் விக்ரமசிங்க
♦ லக்ஷ்மன் கிரியெல்ல
♦ நிமல் சிறிபால டி சில்வா
♦ ரவூப் ஹக்கீம்
♦ விஜயதாச ராஜபக்ஷ
♦ சுசில் பிரேமஜயந்த
♦ ரிஷாட் பதியுதீன்
♦ சம்பிக ரணவக்க
♦ டி.எம்.சுவாமிநாதன்
♦ மனோ கணேசன்
♦ மலிக் சமரவிக்ரம
♦ இரா.சம்பந்தன்
♦ அநுரகுமார திஸாநாயக்க
♦ டிலான் பெரேரா
♦ தினேஸ் குணவர்தன
♦ ஜயம்பதி விக்ரமரத்ன
♦ எம்.ஏ.சுமந்திரன்
♦ பிமல் ரத்நாயக்க
♦ டக்ளஸ் தேவானந்தா
♦ பிரசன்ன ரணதுங்க
♦ துஷிதா விஜேமான்ன

நாடாளுமன்றம் இன்று  அரசியலமைப்பு சபையாக கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதன்முறையாக அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இதன் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக முழு நாடாளுமன்றையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அண்மையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இன்று அதன் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளதோடு, அரசியலமைப்பு சபைக்கு 7 உப தலைவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அத்தோடு நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். நடவடிக்கை குழுவில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நீதியமைச்சர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாகவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சபாநாயகர் நாடாளுமன்றில் விளக்கமளிக்கவுள்ளதோடு, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் உரைகள் இடம்பெறும். அவற்றில் குறிப்பாக, அண்மையில் யாழில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் விடுதலைப் புலிகளுடையதென கருதப்படும் ஆயுதங்கள் என்பன தொடர்பில் பிரதமர் ரணில் உரையாற்றுவாரென தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் மூன்று தினங்களுக்கு மாத்திரம் நாடாளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் முதல் தொடர்ச்சியாக கூடி புதிய அரசியமைப்பு குறித்து ஆராயும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila