நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய உயிரிழப்புகள் தொடர்பாக போருக்கு முன்னதாக சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தது என தெரிவித்த ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, போரின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே அதை ஐ.நாவுக்கு அறிவித் திருந்ததாகவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ரொரன்டோ நகரிலிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த ஞாபகார்த்த நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஐ.நா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2008ஆம் ஆண்டு அவரது நாட்டில் தொடரும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பாரிய போர் ஒன்றை முன்னெடுத்துள்ளதை ஐ.நாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தேன். இதற்காக மகிந்தவை நானோ அல்லது ஐ.நா அமைப்பின் பொறு ப்பு வாய்ந்த அதிகாரிகளோ கண்டித்திருக்க வாய்ப்பில்லை.
இதன்மூலம் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை வெளிப்படையான தகவலாக மாறியுள்ளது.
எனினும் போருக்கான சந்தர்ப்பத்தை எம்மால் தடுத்திருக்க முடிய வில்லை.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கி ய நாடுகள் சபைக்கு அவ்வப்போதே அறிவித்திருந்தார் எனவும் ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.