கலாச்சார நிகழ்வொன்றுக்காக பூநகரியில் அமைந்துள்ள புராதனகாலக் கோட்டையின் ஒரு பகுதியை கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தக் கோட்டையின் ஒருபகுதியை இடித்து அதில் தமது நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த பூநகரி – வாடியடி சந்திகளுக்கிடையிலிருக்கும் குறித்த கோட்டையின் ஒரு பகுதியே இவ்வாறு உடைக்கப்பட்டதாகும்.
அத்துடன் இந்தப் பழைய காலத்து செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மரபுரிமையாக விளங்கும் இக்கோட்டையை பாதுகாக்கவேண்டிய நிலையில் அது இராணுவத்தினரால் இடிக்கப்பட்டமை மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.