உலகமெங்கும் தமிழர் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள்

625.தொழிலாளி வர்க்கம் இருந்தால் முதலாளிகள் வர்க்கம் இருக்கும். சுரண்டல்கள் பல வடிவங்களில் முனைக்கோணங்களில் நடக்கிறது.

தனிப்பட்ட சக்தியும் ஆதிக் சக்தியும் இருக்கும். பெரும் சக்தியாக தொழிலாளர் சக்தியின் போராட்டங்கள் அங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கும். மேதினம் வரலாற்று அதிர்ச்சியின் போராட்ட நெறியின் பிறப்பு.
தொழிலாளர் சக்தியையும் ஆதிக்கசக்தியையும் என்றும் அழிக்க முடியாது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பெருத்த பிளவு இருந்தது.
தொழிலாளர் வர்க்கம்-முதலாளி வர்க்கத்தால் தீண்டப்படாதவனாகவே அன்னியனாகவே விரோதியாகவே இருந்திருக்கிறான்.
மனச்சாட்சி நியாயத்திற்கு இடமின்றி தொழிலாளிகளிடத்தில் முதலாளி வர்க்கம் சுரண்டி வந்துள்ளது. இந்தக் அடிமை வாழ்வு அகற்றிய நாளாகத்தான் மேதினம் உருவெடுத்தது.
புது வடிவெடுத்து உன்னதமான புரட்சிக்கும் விடுதலைக்கும் “சிக்காககோ” புனிததத்துவக் தூபம் இட்டது மானிடத்தின் மாண்புக்கு “கார்ல் மார்க்ஸ்” தத்துவம் கோபுரக் கலசமானது.
தொழிலாளர் தினம் என்றாகியது போராட்டத்தின் போர்வாள் என்றும் உலகத்தில் உழைப்பாளியின் வெகுமதியும் பெறுமதியாகப் போற்றப்படும் புரட்சியின் விடியலாகும். மேதினம் பிற்போக்குகள் முற்போக்குகள் முடிவுக்கு வந்த நாளாக மானிடத்தின் புதுவருடமெனப் போற்றப் படுகிறது.
முகமூடியணிந்து கோலோரின் முகமூடி கிழித்து செங்கொடி ஏந்தி செங்கவிதைகள் முழங்கிய நாள் ஜெகத்தில் ஒளிப்பானது.
முதலாளி தொழிலாளி சுரண்டுபவன் சுரண்டப்படுவன் இல்லாத நிலை தாடிக்கிழவன் கார்ல் மார்க்ஸ் சிந்தனையின் கூர்மூளையின் சங்காரத்தில் மோட்ச நிலைகண்டது.
இன்றைய யுகம் மார்க்ஸின் தத்து மேன்பாட்டில் நடப்பார்களா? நடக்கின்றார்களா? சிந்தனையாளர் இருந்தார் என்பதையாவது அறிவார்களா?
ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி-ஒன்றின் அறிவு மற்றொன்றின் வெற்றி-ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம்-அறிவின் ஆக்கம் எண்ணம் மனிதனின் வளர்ச்சி இதன் அடிப்படைக் கொள்கைதான் உலகில் வெற்றியைக் கண்டது.
தொழிலாளர் தினமாகப் பரவிப் பெருக்கெடுத்து இன்றுவரை வீதிகள் எங்கு செங்கொடிக் கோஷமாய் முழங்குகிறது.
தலைமுறை புரிந்தும் தெரிந்தும் மறவாதிருப்பதற்கே மேதினம் உலகெங்கும் விடுமுறை நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
மேதினத்தின் தோற்றப்பாடு விபரிக்க நீண்டதூரம் கட்டுரை பயணிக்க வேண்டிவரும். தொழிலாளிகளிடம் சமத்துவம் வேலை வாங்கும் நேரம் ஈட்டியிருக்கிறதா? என்றால் புலம்பெயந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் படும்பாடுகள் சாட்சியாக மனச்சாட்சியைத் தட்டும்.
உணவகங்கள்- கடைகள் துப்பரவுத் தோழர்கள் வேலைப்பளு சுமக்கும் தமிழ்த் தோழர்களிடம் விசாரித்தால் வதைப்படலம் திரும்ப ஒருவதை முகமீட்பின் விடுதலைப் போராட்ட மாகத் தொடங்கவேண்டி நேரிடும்.
சிங்கள நாட்டிலும் அடிமைப்பட்டான் பிறர் நாடுகளிலும் அடித்துக் கழுவித் துடைக்கும் கொடுப்பனவிலும் இரத்தம் பிழிந்தெடுக்கும் அடிமையானான்!
சிலர் மத்தியில் படிந்துள்ள ஏகபோக்கின் முரண்பாடுகள் ஆளுகின்றவரிடமும் இல்லை. ஆணவப் பேய்களிடமும் இல்லை. மறைவாக ஒளிச்சு விளையாடுது.முதலாளி அனுபவிப்பதும் தொழிலாளிகளைச் சுரண்டுவதும் எங்கும் உள்ளது.
சலுகை இல்லாத சட்டம் மனிதனுக்குள் இருப்பது தொலைந்து போய்விட்டது எங்கும் இருக்க முடியாது. இன்றைய மனிதன் அன்றைய ஆண்டுபோல் கோழையாக உணர்ச்சியற்றவனாக இருப்பானாகில் பெண்மை சீற்றம் கொண்டெழும்.
நீண்டகாலம் குறுகிக் குன்றி குலைந்து வலிமையற்று இருந்தகாலம் தொலைந்து போய்விட்டதை கண்டு பெண்கள் போராடப் புறப்பட்டவர்கள்.
மனிதன் செய்யும் தவறாகவும் இன்று மதிக்க முடியாது இருந்தாலும் இன்றைய மாற்றம் மதம் மாற்றமாகப் பிறர்நாடுகளில் பெருகிப் பரவிவருவது ஆரோக்கியமற்ற நடவடிக்கையாகவும் உள்ளதில் தமிழர்கள் மத்தியில் இந்த மதமாற்றம்தான் இனிப் புரட்சிக் கோஷமானதாக எழும்.
இன்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த போராட்டங்கள் காலநீட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசரமில்லை. உலகம் முள்ளிவாய்க்கால் அவலத்தை உன்னிப்பாக பார்த்தால் தமிழன் போராடியது விளங்கும் விளங்காமல்தானே நெருப்பைக் கொட்டத் துணை நின்றார்கள்!
கட்டம் கட்டமாக உலகில் நடந்தேறிய போராட்டங்களைப் பார்க்கும் போதினில் மேதினம் பூத்ததின் வடிவம் தூயவடிமாகப் பிரதிபலிக்கின்றது. பல பல தேடப்பாடுகள் பல தலைவர்கள் உரைகள் வலுச்சேர்க்கும்.
விசாரணைக்கும் காலம்கடந்தாலும் வர்க்கத்திற்கு வர்க்கம் இன்னும் உடைக்கப்படாமல் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு முகமூடிகள் கிழிக்கப்படாமல் பொசுக்கப்படாமல் அமுக்கப்பட் டுள்ளதும் தெரியும்.
பழைய கோஷங்கள் உருமாறாமல் இக்காலத்திலும் வீதிக்கு வந்து முழங்கப்படுகிறது வர்க்கம் புரிந்த தவறுகள் இரட்டைக்குணம் படைத்த நிலைப்பாடு சுரண்டலும் சூழ்ச்சிகளும் அகதிகள் வடிவில் நெருக்கப்படுவது நொறுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. சகல தலைகளையும் உடைத்துக் கொண்டு இன்னமும் வெளிவரவில்லை.
இன்றும் புதுயுகப் புரட்சியின் வடிவம் 2016 ம் வந்துதான் இருக்கிறது சுரண்டலின் போக்கின் மலர்ச்சி நிரூபணமானதான மேதினம் இல்லை.
இனி இந்தப் பழைய கோசங்களை விட்டுவிட்டு புதிய வாசகங்களை எழுப்புங்கள். ஒருமுறை பழமையை இழுத்து வந்து புதிய தலைக்குள் புகுத்துவோம். தொழிலாளர்களே ஒன்று படுங்கள்--பாட்டாளிகளே கை கொடுங்கள்- தமிழர்களே ஒன்றுபடுங்கள்.
இத்தலைமுறைக்கு தெருவில் சென்று படியாது போதும். இவ்வார்த்தைகளை தமிழர் நாம் புதியதாய்ப் படைப்போம்.
விண்கூவிய வார்த்தைகளை வாழ்வு தந்த கோஷங்களைப் படைப்போம். அடிமையற்ற சகோதரத்துவக் கொடுங்கோலற்ற ஆட்சியப் புதிதாய்ப் படைப்போம்.
பொதுவுடமைப் பூங்காவில் இலங்கையில் தமிழர்களும் சிரித்துக் களித்திடும் புதிய மேதினம் பூக்கவேண்டும்.
எந்தவித அசம்பாவிதமின்றி எந்தவித அச்சமின்றி எந்தவித குலபேமின்றி எந்தவித வழிபாடுமின்றி எந்தவித வேறுபாடுமின்றி வர்க்கங்கள் அற்ற நிலையில் மனிதன் மனிதத்துவ மேன்மையில் ஜொலிக்கவேண்டும்.
தமிழனைச் சிங்களவன் மதிப்பானாகில்… புதிய மலர்கள் நறுமணம் வீசப் புதிய மேதினம் புதிய கோஷங்களோடு சிறையவிட்டு தெருவுக்குவரட்டும் தமிழன் இலங்கையில் கொண்டாடும் நாளாக அந்தநாள் மலரும்.
கவிஞர் மா.கி.கிறஸ்ரியன்
m.g.christian01@gmail.com
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila