தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் குறித்து பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஆரம்பமாகும் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நிதி அமைச்சின் புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குபற்றிய இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘நேற்று யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் இருப்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவை மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார், அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும், எனக்கும் தகவல் கொடுத்தனர்.
நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் என்னுடன் தொடர்பு கொண்டு இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு கோரினார். இதுகுறித்தும் நான் ஜனாதிபதியிடம் கூறி, இன்று காலை மீண்டும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இதனால் நாம் எல்லோரும் இது குறித்து ஆராய்ந்த பார்த்து எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம். முன்னரைப் பார்க்கிலும் தற்போது தொடர்ச்சியாக ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன.
யுத்தமொன்று நடைபெறும் போது ஆயுதங்கள் மறைக்கப்படுவது, பின்னர் மீட்கப்படுவது ஒன்றும் புதுமையான விடயங்கள் அல்ல. இரண்டாம் உலகப்போரின் போது மறைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போதும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கம் மக்களை ஒன்றிணைத்து செயற்படுவதனால், ஆயுதங்கள் குறித்து முன்னரைப் பார்க்கிலும் தற்போது பெருமளவிலான தகவல்கள் கிடைக்கின்றன. மறைக்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களே எமக்கு தகவல்களை தந்து அவற்றை அழித்துவிடும்படி கூறுகின்றனர்.
இவ்வாறு நாம் ஆயுதங்களை தேடி செல்லும் போது, மறுபுறத்தில் தங்கத்திற்கு என்ன நடந்தது என்றும் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. இவ்விடத்தில் வேறு ஏதும் அமைப்பு செயற்படுகின்றதா?. இவற்றினைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமா?, என்று சகலதையும் ஆராய்ந்து நாம் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவோம். எமக்கு எதனையும் மறைக்க வேண்டிய தேவையில்லை.
ஆனால் இன்று பத்திரிகைகளைப் பார்த்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் எனது நண்பருமான ஜீ.எல்.பீரிஸ் தற்போது நெப்போலியனின் போல் காட்டிக் கொள்கின்றார். பட்டாசு ஒன்றைக்கூட வெடிக்காத அவர் இன்று நெப்போலியனாக மாறியுள்ளார்.
இந்த தற்கொலை அங்கி வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்படவிருந்தது அவருக்கு தெரிந்திருந்தால் அவர் ஏன் பொலிஸாரிடம் கூறவில்லை. இது தேசிய பாதுகாப்பிற்கு அவர் செய்த பாரிய துரோகமாகும்.” என்றும் கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila