| மூதூர் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மூதூர் பிரதேச செயலகம் வரை சென்றது. பேரணியில் ஈடுபட்டோர் பிரதேச செயலாளர் வீ.யுசூப்பிடம் மகஜரை கையளித்தனர். ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவிக்கையில், 'சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் திருகோணமலை, மட்டக்களப்பு பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்ட மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கும் இலக்காவார்கள். அத்தோடு, இயற்கைத் தாவரங்களும் அழியும் ஆபத்து நிலவும்.இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்' என்றார். |
சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிராக மூதூரில் ஆர்ப்பாட்டம்!
Add Comments


