உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மாதிரி வீட்டினை நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ..எல்.பீரிஸ் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளும் வெடி குண்டுகளும் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்ததை தான் அறிந்திருந்தாதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நாட்டிலே வெடி குண்டு வைத்திருந்ததாக அல்லது வெடி குண்டு கொண்டு செல்லப்பட உள்ளதாக அல்லது ஒரு இடத்தில் வைப்பட உள்ளதாக அறிந்த காரணத்தை தெரிந்தும் சொல்லாத காரணத்தால் பலர் சிறைகளில் கைதிகளாக தங்களுடைய காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களுடைய இளமைக் காலங்களைத் தொலைத்து கொண்டிருக்கின்றார்கள. இவ்வாறு இருக்கின்ற நிலையில், ஜீ.எல்.பீரிஸ் சொன்னதற்காக அவருக்கு ஏன் புனர்வாழ்வு அளிக்ககூடாது. தமிழ் மக்கள் இன்னும் யுத்தத்தையே விரும்புகிறார்கள் என்ற மாயையை, சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்க இலங்கை அரசாங்கம் கபட நாடகமாடுகிறது.
சமாதானம், சகவாழ்வு, நிரந்தர தீர்வு குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் கபட நாடக நோக்கத்தோடு வடக்கில் வெடிபொருட்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகளை அரங்கேற்றுகின்றது.
தமிழர்கள். நிம்மதியாக வாழ முடியாத நிலையிலும், அவர்களைத் தொடர்ந்தும் யுத்த சூழ்நிலைகளுக்குள் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முனைவதை வன்மையாக கண்டிப்பதுடன், சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் வெளிப்படைத் தன்மையோடு உண்மைகள் வெளிக்கொண்டுவரவேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார்.