சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர் குண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பற்றிகள் என்பன மீட்கப்பட்டதான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்கொலை அங்கிகள், கிளைமோர் குண்டுகள் என்பன சாவகச்சேரியில் மீட்கப்பட்டதான சம்பவத்தை அடுத்து முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் செய்திகள் சமாதான சூழ்நிலையில் பெரும் தாக்கமான தகவல்கள் என்பது ஏற்புடையதே.
இதேவேளை குறித்த அங்கிகள், குண்டுகள் மீட்கப்பட்டதான தகவல்கள் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கையின் முன்னைய அரசு கூறி வந்த நிலையில் புதிய நல்லாட்சியில் விடுதலைப்புலிகள் மீண்டும் தலை தூக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டென்ற பிரசாரங்களும் தென்பகுதியில் நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்கொலைத் தாக்குதல் அங்கிகளும், கிளைமோர் குண்டுகளும் சாவகச்சேரியில் மீட் கப்பட்டன என்ற செய்தியை தென்பகுதியில் உள்ள இனவாத ஊடகங்கள் எப்படி வெளியிடும் என்பதை நாம் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்காது.
ஆக, குறித்த சம்பவம் தொடர்பில் தென்பகுதி ஊடகங்கள் ஒப்பனை செய்து செய்தி வெளியிட அதை தென்பகுதி மக்கள் அப்படியே நம்பிவிட தமிழ் மக்கள் இன்னமும் போராட்டத்தை கைவிடவில்லை என்ப தான காட்டாப்பு காட்டப்படும்.
யுத்தத்தின் கோரத் தண்டவத்தில் அகப்பட்டு, பெற்ற பிள்ளைகளை இழந்து, சொத்திழந்து, சுகமிழந்து ஏன்? மனிதனாய் பிறந்தோம் என்று கண்ணீர் விடுகின்ற தமிழ் மக்கள் தங்களின் இருப்பு, காணாமல்போன பிள்ளைகளின் நினைப்பு, சிறைகளில் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை என்ற நினைவுகளு டன் காலத்தைக் கழிக்கின்ற வேளையில்,
இடையிடையே ஆயுதங்கள் மீட்பு, குண்டுகள் கண் டுபிடிப்பு என்ற செய்திகள் முன்னாள் போராளிகளின் இதயத்தை கருக்கி விடுகின்றன.
ஒரு பெரும் வேட்கையுடன் போராட வெளிக்கிட்டு, பின்னர் எல்லா இழப்புகளையும் சந்தித்து, புனர்வாழ் வும் கண்ட பின்னர் நிம்மதியாக வாழக்கூட முடியவில்லை என்றால், முன்னாள் போராளிகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அறிவதில்; உணர்வதில் நம்மிடம் யார்தான் உளர்?
எனவே, வடபுலத்தில் இராணுவம் நிலைகொள்ள வேண்டும் என்று ஆளுந்தரப்பு நினைத்தால் பயங்கர வாத அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்து இருக்கிறது என்பதை நிரூபிப்பது கடினமான விடயமன்று.
எது எப்படியாயினும் பாம்பாட்டிகள் தங்கள் பெட்டிகளில் வைத்திருக்கின்ற பாம்புகளை வெளியில் விடு வார்கள். பின்னர் மகுடியை எடுத்து வாசிப்பார்கள். பெட்டிப்பாம்புகள் மகுடிக்கு ஆடிக்கொள்ளும். அடேங் கப்பா! எங்கள் வீட்டில் வளவில் பாம்புகள் இருந்துள்ளன.
நல்ல காலம் பாம்பாட்டி வந்து மகுடி வாசித்ததால் பாம்புகள் இனங்காணப்பட்டன என்று நம்பி பாம்பாட் டிக்கு பணம் வழங்கப்படும். இந்த நம்பிக்கைகள் பாம் பாட்டிகள் இருக்கும் வரை தொடரவே செய்யும்.
என்ன செய்வது! பாம்பாட்டியும் பாம்பும் சேர்ந்து கொண்டால் மக்கள் நம்பி ஏமாறுவர். இதேபோல் தான் எங்கள் நிலைமையும்.
ஆம்! நாங்கள் சிறுபான்மை இனம். சிறுபான்மை இனத்தின் தலைமையும் ஆளுந்தரப்புடன் இணை ந்து அனுபவிக்கும் போது எங்களால் என்ன செய்ய முடியும். நடப்பதைக் கண்டுகொள்வோம் அவ்வளவு தான்.


