
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த வியாகமூர்த்தி முரளிதரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விசேட புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆதவனின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முறைப்பாடுகளை பெற்றுவருகின்ற நிலையில், அதில் சாட்சிகளை பதிவு செய்திருந்த பலரும் தமது உறவுகள் காணாமல் போனமைக்கும் மேற்குறித்த இருவருக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரிவித்து வந்தனர். அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று காலை இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மிக விரைவில் மேலும் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் அலுவலகம் இயங்கி வருகின்ற யாழ் சிறீதர் திரையரங்கு அமைந்துள்ள பகுதியில் பெருமளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தின் இன்றைய திகதியை மனதில் வைத்து இந்தச் செய்தியை மீண்டும் ஒருமுறை வாசிக்குமாறு ஆதவனின் வாசகர்களை கேட்டுக் கொள்கின்றோம்.