இந்தநிலையில் குறித்த சிங்கள மீனவர்களுக்கு ஆதரவான இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படுபவர்களால் இரண்டு கிராம சேவகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான கிராம சேவகர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான கிராம சேவகர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலை காணப்படுகிறது. |
கொக்கிளாயில் சிங்கள மீனவர்கள் அடாவடித்தனம் - கிராம சேவகர்கள் மீது தாக்குதல்!
Add Comments