புலிகளின் பெயரை பயன்படுத்தி படையதிகாரிகள் பலர் படுகொலை


விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி படை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் முன்னாள் படை அதிகாரியும் பின்னர் அரசியலில் ஈடுபட்டவருமான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மூத்த கண்காணிப் பாளர் ஊபுல் செனிவிரத்ன ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

மேற்படி தகவலை தென்பகுதி ஊடக மான சத்ஹண்ட என்ற வார இதழ் வெளியிட்டுள்ளது. அத் தகவலில் மேலும் குறிப்பிடுகையில்,

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பாக, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே படை அதிகாரிகள் படுகொலை விபரங்களும் தெரியவந்திருக்கின்றன.
நீதிமன்ற உத்தரவையடுத்து இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களிலேயே இதுபற்றிய விபரங்களும் அடங்கியிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டங்களுடன் இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியே, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது.
1999 டிசெம்பர் 18ஆம் திகதி, ஜாஎலவில் ஐதேகவின் பேரணியில் மேஜர் ஜெனரல் லக்கி அல்கமவின் மீதான தற்கொலைத் தாக் குதலை இராணுவப் புலனாய்வுப் பிரிவே திட்டமிட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய, அப்போது குற்றப் புலனாய்வுப் பிரி வின் பணிப்பாளராக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ஹேமச்சந்திர இதனை உறுதிப் படுத்தும் அறிக்கையை  தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்தச் சம்பவத்துக்கு அப்போது இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இரு ந்த- இப்போது ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜென ரல் ஒருவர் மீது அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தற்கொலைக் குண்டுதாரிகளைக் கண் காணித்த விடுதலைப் புலிகளின் உயர்மட் டப் பிரமுகர் ஒருவருடன், இந்த மேஜர் ஜென ரல் தொடர்புகளை வைத்திருந்தார்.

அவரைக் கைது செய்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஹேமச்சந்திர, பாது காப்பு அமைச்சின் அனுமதியைக் கோரிய போது, அது இராணுவத்தினரை நிலைகுலைய வைக்கும் என்று நிராகரிக்கப்பட்டது.
அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமை யிலான அரசாங்கம் பதவியில் இருந்தது.

தனிப்பட்ட பகைமை காரணமாகவே, 2006 ஓகஸ்ட் 07ஆம் நாள், கண்டி- திகண வில் வைத்து சிறப்பு அதிரடிப்படையின் கட் டளை அதிகாரியான செனிவிரட்ண மீது கிளை மோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை யும், குற்றப் புலனாய்வுத் துறையினர் கண்ட றிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்படு கிறது.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த அந்தக் காலகட்டத்தில், செனிவிரட்ன அக் கரைப்பற்றில் பணியாற்றியிருந்தார். அவர் கருணா குழுவுடன் நெருக்கமான தொடர்பு களை வைத்திருந்தார்.
இதனால் அந்தப் பகுதியில் இருந்த இரா ணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி அவரைப் படுகொலை செய்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila