தமிழ் மக்கள் பேரவையின் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ் நூலகத்தில் கூடியது இதில் கலந்து கொண்ட முதலமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
தமிழ் மக்கள் பேரவையின் 11 பேர் கொண்ட குழுவில் இருந்து விலகிக் கொள்வதாகவே வட மாகாண முதலமைச்சர்ன் க.வி.விக்னேஸ்வரன் குறித்த பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்.
இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிலர் இந்த செய்தி வெளியில் வராது பார்த்துக்கொள்ளுங்கள் என அங்கு கூடியிருந்தவர்களை வேண்டிக்கொண்டனர்.