அத்துடன் தமிழர்களை கொண்டு பெறப்படுகின்ற பணம் அவர்களுடைய அபிவிருத்திகளுக்குப் பயன்படுவதில்லை எனவும் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அபிவிருத்திகள் பயனளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முதலமைச்சருக்கு, அரசாங்க அதிபரை அழைத்து பேசும் அதிகாரம், பிரதேச செயலாளரை இடமாற்றும் அதிகாரம், கிராம சேவையாளரை இடமாற்றுவதற்கு அரச அதிபருக்கு கட்டளையிடும் அதிகாரம் இல்லாத வரை அபிவிருத்தி என்பது ஏமாற்றுகின்ற செயற்பாடாகவே அமையும்.
தமிழர்கள் ஆயுதங்கள் மீது மோகங்கொண்டவர்கள் இல்லை என நிரூபிக்க முனைகின்றபோது, அரசாங்கம் அதனை குழப்ப முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அபிவிருத்தியூடாக வீடு, மின்சாரம் வழங்குகின்றோம், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றோம் என அரசாங்கம் தெரிவிக்கின்றமை மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.