இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யுத்த குற்ற விசாரணையில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பங்ளிப்பு இன்றியமையாததாக உணரப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆணையாளர், காணி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர விசேட செயலணி அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், காணிகளை விடுவிக்கும் செயற்பாடானது மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. இந்த விடயத்தில் காணப்படும் குறைவான நம்பகத்தன்மையானது பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும், சிறுபான்மை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதில் தவறியுள்ளது. இந்நிலையில், மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையையும், சுயாதீனத்தையும், பக்கச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நீதிப்பொறிமுறை விசாரணையில் சர்வதேச பங்களிப்பானது அவசியமாகிறது எனக் கருதப்படுகிறது. அதேவேளை, நீதிப்பொறிமுறையை அமைக்கும் செயற்பாட்டில் இலங்கைக்கு தேவையான அனைத்து விதமான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க மனித உரிமைகள் பேரவை தயாராக உள்ளதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது: செயிட் அல் ஹுசைன்

Add Comments