வன்முறையின்றி வடக்கு அமைதியாக பொலிஸார் உடன் நடவடிக்கை (பொலிஸ்மா அதிபர் பூஜித யாழில் தெரிவிப்பு)


வடக்கு நிலைவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்தே பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வடக்கு மக்கள் வன்முறையின்றி அமைதியாக வாழ்வதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை மேற்கொள்வர் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழிற்குநேற்று விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உத் தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை இடம்பெற்ற இக்கலந்துரையாடல் பொலிஸாரின் குறைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்தும் அவர் ஆராய்ந்துள்ளார்.

சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து; தெரிவித்த பொலிஸ்மா அதிபர்,
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் சகல குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளேன். 

இவ்வாறான சந்திப்புக்களை சிவில் அமைப்புக்களுடனும் மேற்கொள்ளவுள்ளேன். இந்த சந்திப்புக்களில் சிவில் சமூக அமைப்புக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் பொலிஸ் திணை க்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்பாக விளக்கமளிப்போம். 
இவ்வாறு மத்திய மாகாணத்தில் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்கள் நடத்தி, அவர்களிடம் எடுத்துக்கொள்ளப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் ஊடாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நடவடிக்கைகள் மத்திய மாகாணத்தில் வெற்றியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், யாழிலுள்ள பொலிஸாரின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், பதில் வழங்கக் கூடியவற்றிற்கு பதில் வழங்கப்பட்டுள்ளதுடன், தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

பொலிஸாரின் சேவைகளை திருப்தி அளிக்கும் வகையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம்,  நலன்புரி விடயங்களை தேடியறிந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்த பூஜித,

இவற்றினை வழங்குவதன் ஊடாக் சிறந்த மதிப்புமிக்க மற்றும்; பொதுமக்களுடான நல்லுறவை பேணக்கூடிய சிறந்த பொலிஸ் சேவை வழங்க முடியுமென எதிர் பார்க்கின்றேன் என குறிப்பிட்டார்.
அதேவேளை, கிராம மட்டங்களில் உள்ள சிவில் அமைப்பு பாதுகாப்புக் குழுக்களின் ஊடான நட்புறவினை வளர்த்துக்கொள்வதன் மூலமும், குற்றங்களை குறைத்து சிறந்த சேவையினை வழங்க முடியும்.
அண்மைக்காலங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப் பட்டு, தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் அறிவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். 

இவ்வாறான நடவடிக்கைகளை துரிதப்ப டுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் சந்தித்து கலந்துரையாடவுள்ள தாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறி னார்.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila