பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வாழும் வெளிநாட்டினர் உடனே வெளியேற வேண்டும் என பிரிட்டன் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே இனவெறி தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட இனவெறி புகார்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் போலந்து சமூக மற்றும் கலாச்சார கழகம் உள்ளது. அங்குள்ள சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஐஸ்கார் என்ற இடத்தில் தொடக்க பள்ளியின் வெளியே போலந்துகாரர்கள் வெளியேற வேண்டும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் முக்கிய வீதியில் சென்ற பிரெஞ்சுக் காரரின் குடும்பத்தினரை நோக்கி எதிரே சென்ற சிலர் “வெளியேறு, வெளியே போ” என கூச்சலிட்டு சென்றனர். மேற்கு லண்டனில் பள்ளிக் குழந்தைகளின் மீதும் இனவெறி தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற வலைதளங்களில் வெளிநாட்டினருக்கு எதிரான கருத்துக்களும், இன வெறியும் தூண்டப்படுகின்றன. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டினர் அச்சத்தில் உள்ளனர்.
பிரிட்டனில் வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல்!

Add Comments