இதுதொடர்பில் அவர் தொடாந்தும் தெரிவிக்கையில், 90 களின் இறுதிப் பகுதியில் தனது தந்தையான குமார் பொன்னம்பலத்துடன் தொடர்பினை ஏற்படுத்திய நோர்வே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளுடன் ஆரம்பிக்கபடவுள்ள பேச்சுவார்த்தையில் பிரதான பங்கு வகிக்குமாறு கேட்டுக்கொண்டு, பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே தந்தை கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பேச்சுவார்த்தை முஸ்தீபுகள் சுயலாப அரசியல் நடத்துகின்ற பல தரப்புக்களுக்கும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு தடையாக குமார் பொன்னம்பலம் விளங்கப் போகின்றார் என்ற அச்சத்தினை ஏற்படுத்தியதாகவும், கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.